Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தரமான ஜென்டில்மேன் என்பதற்கு உதாரணமாக எண்பதுகளின் காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமல் இருவரும் சமகாலத்து போட்டியாளர்கள்.
இப்போதைய விஜய்- அஜித் ரசிகர்களின் பஞ்சாயத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவர்களின் ரசிகர்கள் தியேட்டர்களில் பெரிய பெரிய பஞ்சாயத்து கிளப்பி சம்பவம் பண்ணிக் கொண்டிருந்த காலம். எந்த ஹீரோவின் படம் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடுகிறதோ அந்த படம் தான் சூப்பர் ஹிட் படம்.
ஜென்டில்மேனாக நடந்து கொண்ட ரஜினி
இப்போது மாதிரியெல்லாம் அப்போது வசூல் கணக்கு என்று எதுவும் கிடையாது. அந்த சமயத்தில் கமல் நடித்த சகலகலா வல்லவன் திரைப்படம் தியேட்டரில் சக்கை போடு போட்டது. இந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சியில் பின்னால் இருக்கும் சுவரில் எம்ஜிஆரின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருக்கும்.
தியேட்டரில் எம்ஜிஆரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இது படம் தியேட்டரில் ஓடும் நாள் வரை தொடர்ந்து நடந்து கொண்டு இருந்திருக்கிறது. இதனால் பாயும் புலி படத்திலும் ஒரு காட்சியில் எம்ஜிஆரின் போஸ்டரை ஓட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதை அறிந்து கொண்ட ரஜினிகாந்த் எதற்காக எம்ஜிஆர் போட்டோ இதில் வர வேண்டும் என கேட்டு இருக்கிறார். அதற்கு சகலகலா வல்லவன் ரிலீஸ் சமயத்தில் நடந்ததை விவரித்து இருக்கிறார்கள். உடனே ரஜினி வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.
என்னுடைய ரசிகர்கள் என்னை பார்ப்பதற்காக தியேட்டருக்கு வரட்டும். அந்த பெரிய மனிதரின் முகத்தை பயன்படுத்தி நான் பாராட்டை பெற வேண்டும் என்றால் அப்படி ஒரு விஷயம் எனக்கு வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டாராம்.