Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர். அதுமட்டுமல்லாமல் வயதளவிலும் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர். இவர் நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் அவர்களோடு ஏகப்பட்ட நடிகைகள் நடித்துள்ளனர். சிறு வயதிலிருந்து பருவமானது வரை அதற்குப் பிறகு நிறைய நடிகைகள் நடித்துள்ளனர். பெரும்பாலும் சினிமாத்துறை என்பதால் வயது வித்தியாசம் எல்லாம் பார்ப்பது கிடையாது.
மூத்த நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு இளம் நடிகைகளுக்கும் கிடைக்கிறது. அதனால் அவர்கள் அதை தட்டி கழிப்பதில்லை அழகாக நடித்துக் கொடுத்து படத்தை வெற்றி பெற வைத்து விடுகிறார்கள் இளம் நடிகைகள். ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து விட்டதால் இனி அவர்களோடு ஜோடி போட்டு நடிக்க மாட்டேன் என்றும் சில நடிகர்கள் இருக்கிறார்கள்.
சூப்பர்ஸ்டார் என்ன சொன்னாரு தெரியுமா பாலைய்யா சார்..
இவ்வாறு போய்க் கொண்டிருக்க தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இளம் வயது ஹீரோயின்களுடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். முடிந்த அளவில் அதை நான் தவிர்த்து உள்ளேன் இனிமேலும் தவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் உங்களின் அன்பினால் தான் நான் இன்று வரை சினிமாவில் நிலைத்து உள்ளேன். அதனால் எனது வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றும் ஓப்பனாக பேசியுள்ளார் நம் சூப்பர் ஸ்டார்.
இந்த செய்தி சூப்பர் ஸ்டார் இளம் வயது நடிகைகளுடன் நடிக்க மாட்டார் என்று கூறியுள்ளார் பாலைய்யா என்று கலகலப்பாக பேச்சு எழுகிறது. தெலுங்கு சினிமா பிரபலமான நடிகர் பாலைய்யா,ரஜினி அவர்களைப் போல் வயதில் மூத்த நடிகர் ஆவார். ஆனால் இவர் இப்போது வரை இளம் வயது நடிகைகளுடன் மசாலா மிக்ஸ் பாடல்களில் டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்து கொந்தளித்து போன ரசிகர்கள். எங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள், வயதிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களாம் இவ்வாறாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.