இன்றைய சின்ன மருமகள் சீரியலில் கண்மணியை பொண்ணு பார்க்க. வருகிறார்கள். ராஜாங்கம் யார் இவங்க என்று கேட்கவும் சன்னாசி அண்ணன் இவங்க ரொம்ப நாளாக கண்மணியை பொண்ணு கேட்டாங்க. நான் தான் கண்மணி வெளியூரில் படிச்சிட்டு இருந்ததால, படிப்பு முடித்தவுடன் வர சொன்னேன் என்று சொல்கிறான்.
உடனே கண்மணி ஆறுமுகத்தை லவ் பண்ணுவதால் எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்கிறாள். ஆனால் ராஜாங்கம் கண்மணிக்கு திருமணம் பேசி முடித்து விடுகிறார்.
கண்மணி ஆறுமுகத்திடம் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று உறுதியாக சொல்ல, ஆறுமுகமோ நான் ஒரு பிச்சைகாரன் நான் உனக்கு தகுதி இல்லாதவன்.
நீ உங்க குடும்பத்துல சொன்ன மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறான். இதற்கிடையில் கண்மணியும், ஆறுமுகமும் பேசுவதை தமிழ் செல்வி கேட்கவும் கண்மணியிடம் நடந்தததை எல்லாம் கேட்கிறாள்.
ஆமாம் எனக்கு இந்த கல்யாணத்தில் எனக்கு துளி அளவு விருப்பம் இல்லை நான் ஆறுமுகத்தை தான் லவ் பண்றேன் என்று சொல்லவும், தமிழ் ஆறுமுகத்திடம் நான் உங்களை ஒரு அண்ணன் ஆக தான் பார்க்கிறேன் அதனால் நீங்க என்கிட்ட உண்மையை சொல்லுங்க என்று கேட்கிறாள்.
ஆமாம் தமிழ் நானும் கண்மணியை உயிருக்கு உயிரா லவ் பண்றேன். ஆனால் நானோ இந்த வீட்டு டிரைவர், நான் எப்படி கண்மணியை கல்யாணம் செய்ய முடியும் என்று கேட்கிறான் .
உடனே தமிழ்செல்வி கவலைபடாதீங்க என்று சொல்லி மறுநாள் இருவருக்கும் வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்து வைத்து விடுகிறாள். தமிழ்செல்வியின் இந்த ரிஸ்க்கான முடிவு ராஜாங்கம் குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை இனிவரும் எபிசோட் ல் பார்க்கலாம்.