Anirudh: அனிருத் கைவசம் இப்போது கூலி, ஜனநாயகன், ஜெயிலர் 2 உட்பட தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் இருக்கிறது. ஆனாலும் அவருடைய இடத்தை சாய் அபயங்கர் பிடித்து விட்டதாக ஒரு பேச்சு இருக்கிறது.
இதற்கு காரணம் தற்போது இவர் கைவசம் எட்டு படங்கள் இருக்கிறது. இன்னும் இவர் இசையமைத்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனால் பெரிய ஹீரோக்களின் பார்வை இவர் பக்கம் திரும்பி இருக்கிறது.
இதன் பின்னணியில் அட்லி, சிம்பு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அனிருத் மீது இருக்கும் வருத்தத்தின் காரணமாகத்தான் அட்லி அல்லு அர்ஜுனை வைத்து எடுக்கும் படத்திற்கு சாய் அபயங்கரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
தழும்பு போட்ட அனிருத்துக்கே தழும்பா
ஏனென்றால் ஜவான் படத்தின் போது அனிருத் தன் வேலைகளை தாமதமாக செய்து கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் அனிருத் குழுவில் முக்கியமானவராக இருந்த சாய் அபயங்கர் மீது அட்லி பார்வை திருப்பி இருக்கிறது.
தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்ததோடு சிம்புவிடமும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். உடனே சிம்புவும் அவருடைய திறமையை பார்த்து தன் படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அது மட்டும் இன்றி தனக்கு தெரிந்த பல பேரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.
இப்படி திரைமறைவில் அனிருத்துக்கு எதிராக சில வேலைகள் நடப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. அதேபோல் அனிருத் வந்தபோது பல இசையமைப்பாளர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள்.
ரஜினி தனுஷ் முலம்தான் இவருடைய என்ட்ரி இருந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர வர இவருடைய அந்தஸ்து உயர்ந்தது. ஆனால் இப்போது அவருடைய இசை ஒரே மாதிரி இருக்கிறது. வேறு சில பாடல்களை காப்பியடிக்கிறார். கேட்பதற்கு இனிமையாக இல்லை என்ற கருத்துக்கள் இருக்கிறது.
அது மட்டும் இன்றி சொன்ன நேரத்தில் பாடல்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அவர் ஓரம் கட்டப்படுவதாக கூறுகின்றனர். தழும்பு போட்ட குடும்பத்துக்கே தழும்பா.