Memes: தமிழக வெற்றி கழகம் இப்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. இவர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் தான் இணையதளத்தில் ஒரே போட்டியாக இருக்கிறது.

இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்வதில் தொடங்கி கலாய்த்து மீம்ஸ் போடுவது வரை வைரல்தான். சமீபத்தில் விஜய் தன் கட்சியின் சார்பில் அஜித்குமார் மரணத்திற்காக ஒரு கண்டன போராட்டம் நடத்தினார்.

அதைத்தொடர்ந்து இப்போது அவர் அடுத்த மாநாட்டிற்கு தயாராகி விட்டார். கடந்த வருடம் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அடுத்தது எந்த ஊர் என எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் மதுரை என அறிவித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 25 இந்த மாநாடு நடைபெறுகிறது. அன்று இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது விஜயின் திருமண நாளும் அன்றுதான். அதையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

பல ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் மாநாட்டிற்கு பூமி பூஜை போடும் நிகழ்வும் நடந்து முடிந்து விட்டது .அதுதான் இப்போது ட்ரெண்டிங் செய்தியாக இருக்கிறது. அதை போல் விஜய் எதிர்ப்பாளர்கள் அதை ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் தொண்டர்கள் இதுவரைக்கும் பார்க்காத ஒரு சம்பவத்தை பாப்பீங்க. அதன் பிறகு பல கட்சியினர் இருக்கும் இடம் தெரியாமல் போயிடுவீங்க என அலப்பறை செய்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க லோகேஷ் அடுத்து லியோ 2 மாஸ்டர் 2 எது பண்ண போறோம் என விஜய்யிடம் கேட்பது போலவும் அவர் மாநாடு 2 என சொல்வது போலவும் மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
