Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தர்ஷன் கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும். இது என்னுடைய மானப் பிரச்சனை, இதில் நான் தோற்றுப் போய் விடக்கூடாது. அதற்கு நீ என்ன வேணாலும் பண்ணு என்று குணசேகரன், அறிவுகரசிடம் சொல்லிவிட்டார். உடனே இந்த அறிவுக்கரசி இதை பயன்படுத்தி ஜெயிலுக்குள் இருக்கும் ஞானத்தை போட்டு தள்ளுவதற்கு தயாராகி விட்டார்.
ஞானத்தை காலி பண்ணி விட்டு, இந்த பழியை ஜனனி மற்றும் ஜீவானந்தம் மீது போட்டு விட்டால் மற்ற பெண்களுக்கு இது ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்று மொத்த வன்மத்தையும் காட்ட தயாராகி விட்டார். ஆனால் இனி பெண்களின் ராஜ்ஜியம் மட்டுமே, நாங்கள் நினைத்தது தான் நடக்கும் என்பதற்கு ஏற்ப ஜனனி எல்லாத்துக்கும் துணிந்து விட்டார்.
அந்த வகையில் அறிவுகரசியை ரூமுக்குள் தனியாக கூப்பிட்டு பேசப் போனார்கள். உடனே அறிவுக்கரசி தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போகிறார்கள் என்று மெத்தனமாக உள்ளே போய் பொறி வலைக்குள் சிக்கிய எலியாக மாட்டிக் கொண்டார். அதாவது எங்க வீட்டிலேயே வந்து எல்லாத்தையும் அதிகாரம் பண்ணிய உன்னை சும்மா விட முடியாது என்று ஜனனி, அறிவுக்கரசி கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.
அதோடு மேலே உட்கார்ந்து அடித்து காலை உடைத்து, அறிவுக்கரசி கன்னத்தை நந்தினி பொளந்து கட்டி ரேணுகா அவருடைய பங்குக்கு அடித்து அறிவுக்கரசியை மொத்த பெரும் சேர்ந்து பந்தாடி விட்டார்கள். இந்த தருணத்தை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி என்று சொல்வதற்கு ஏற்ப அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
இவர்களிடம் அடி வாங்கினதை சொல்லவும் முடியாமல், வலியை தாங்கவும் முடியாமல் அறிவுக்கரசி மூஞ்சி இஞ்சி தின்ன முகமாக மாறிவிட்டது. இதோடு போதாது இனிதான் அறிவுக்கரசியின் ஆட்டத்திற்கு பலத்த அடி இருக்கிறது என்பதற்கு ஏற்ப பார்க்கவியும் அவருடைய பங்குக்கு கதிர் மற்றும் அறிவுக்கரசியை சேர்த்து வைத்து பந்தாட போகிறார்.