Sarathkumar : நடிகர் சரத்குமார் அவர்கள் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி வைத்துள்ளார். நாட்டாமை படத்தின் மூலம் இவர் மேலும் புகழ்பெற்றார்.
இவர் நடித்த அத்துனை படங்களும் பெரும்பாலும் நல்ல பெயரை எடுத்துக்கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று வரை இவர் சினிமாவில் நிலைத்து கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாகவும், ஆக்சன் படங்கள் என்றாலுமே சரியாக கச்சிதமாக நடித்து கொடுப்பார். அணைத்து கதாபாத்திரத்தியும் ஏறு கொண்டு நடிக்கும் வல்லமை பெற்றவர்.
இந்த படத்துல யாரு சின்ராசு-னு தெரியுமா..
இவர் நடிப்பில் வெளிவந்த சூர்யவம்சம் படம் இன்றுவரை அனைவர் மனதிலும் இருந்து மறையவில்லை. இன்று வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது சூர்யவம்சம் படம். இந்த படத்தில் வரும் பாடல்களில் ஒரே பாட்டில் பணக்காரனாக மாறிவிடுவது போன்ற காட்சிகள் இன்று வரை சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் உள்ள சின்ராசு வசனம் இன்றுவரை பிரபலக பேசப்படுகிறது. இப்படி அத்தனை விஷயங்கள் இந்த படத்தை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம்.
தற்போது எல்லாருக்கும் இனிப்பு தரும் வகையில், சூர்யவம்சம்2 எடுக்கப்போறாங்களாம். இந்த படத்தை “சூப்பர் குட் பிலிம்ஸ்” தயாரிக்கவுள்ளதாம். இயக்குனர் “பிரபு சாலமன்” அவர்கள் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
சூர்யவம்சம் பட ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஆமா சரத்குமார் அவர்களுக்கு வயதாகிவிட்டது அப்போ அந்த சின்ராசு யாரை இருக்கும் என்று யோசித்தால். அந்த இடத்தை நிரப்ப நடிகர் ஜீவாவை தேர்வு செஞ்சிருக்காங்களாம். அப்போ படம் கலகலப்பா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது.