Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லி இருந்தாலும் ஒவ்வொரு நொடியும் மீனா ஞாபகத்திலையே இருந்தார். மீனாவும் எப்பொழுது நாம் கணவருடன் போகலாம் என்ற ஏக்கத்தில் இருந்த பொழுது முத்துவின் கோபம் தணிந்து விட்டது என்று மீனாவிற்கு தெரிந்ததும் வீட்டிற்கு வந்து விடுகிறார்.
வந்ததும் அனைவருக்கும் வழக்கம் போல் சமைத்துக் கொடுத்து ஸ்ருதியின் ரூமில் போய் இருக்கிறார். அப்பொழுது சவாரியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த முத்துவிற்கு பசி எடுத்ததால் சாப்பிடுவதற்கு போகிறார். சாப்பாட்டை டேஸ்ட் பண்ணியதும் இது மீனாதான் சமைத்தது என்று மீனாவை கூப்பிட ஆரம்பித்து விட்டார். உடனே சுருதி ரூமில் இருந்த மீனா ஓடிப் போயி முத்து முன்னாடி நின்னு விட்டார்.
இரண்டு பேரும் ஆனந்தக் கண்ணீரில் பேசி பாசத்தை காட்டும் விதமாக ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டி விட்டு சந்தோசமாக ஒன்று சேர்ந்து விட்டார்கள். அடுத்ததாக சீதா போன் பண்ணி மாப்பிள்ளை விருந்துக்கு கூப்பிடுகிறார். முத்து மாமாவையும்ம் கூட்டிட்டு வரவேண்டும் என்று சீதா சொல்கிறார். அதன்படி மீனா, முத்துவை சீதா வீட்டிற்கு கூப்பிடுகிறார்.
ஆனால் முத்து நான் வந்தால் அங்கு தேவையில்லாமல் பிரச்சினையாகும். எனக்கும் அவரை பிடிக்காது, அவனுக்கும் என்னை பிடிக்காது அதனால் தேவையில்லாத சங்கடம் சீதாவுக்கு வேண்டாம். நீ மட்டும் போயிட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். உடனே மீனா, சீதா வீட்டிற்கு தனியாக போகிறார். அங்கே சீதா மற்றும் மாமியார் ஒற்றுமையான பாசத்தை பார்த்ததும் மீனா கண்கலங்கி போய்விட்டார்.
அத்துடன் விஜயா, அடிக்கடி திட்டியதை யோசித்துப் பார்த்து மீனா பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு நடந்த விஷயத்தை வீட்டிற்கு வந்ததும் முத்துவிடம் சொல்கிறார். முத்துவும் பீல் பண்ண ஆரம்பித்து எனக்கும் ஒரு நல்ல அம்மா பாசம் கிடைக்கவில்லை, உனக்கும் மாமியார் பாசம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு இரண்டு பேரும் பேசிக் கொள்கிறார்கள்.
அடுத்ததாக விஜயாவின் மனசை மாற்றப் போகும் விதமாக மீனா கர்ப்பமாக போகிறார். அப்பொழுதுதான் விஜயா பாட்டி ஆகிற சந்தோஷத்தில் மீனாவை வெறுக்காமல் பாசத்தை காட்டப் போகிறார். இதற்கிடையில் செஞ்ச பாவம் எல்லாம் சும்மா விடாது என்பதற்கு ஏற்ப ரோகிணி கொஞ்சம் கொஞ்சமாக நரக வேதனையை அனுபவித்து வருகிறார்.
மாமியாரை சமாளிப்பதற்காகவும் செய்த தில்லாலங்கடி வேலையில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஸ்ருதி அம்மாவிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினார். அதை ஸ்ருதி அம்மா கேட்டு ரோகிணியை வேலை வாங்குகிறார்.
அந்த வகையில் ரவி வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சென்று நீத்துவிடம் பேசி சில விஷயங்களை தெரிந்துகொள்ள சொல்கிறார். இனி ரோகினி, சுருதி அம்மாவிடம் மாட்டிக் கொண்டு அல்லல்பட போகிறார்.