Vijay Antony : விஜய் ஆண்டனி சமீபகாலமாக வித்தியாசமான படங்களை கையாண்டு வருகிறார். அவருக்கு அந்த படங்களும் வெற்றி கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜென்டில் உமன் படத்தை இயக்கிய ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இத படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். மேலும் இதில் வக்கீல் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ள நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் விஜய் ஆண்டனிக்கு எதிராக வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதாவது அர்ஜுனின் சாது மற்றும் கமலஹாசனின் ஆளவந்தான் ஆகிய படங்களில் நடித்தவர்தான் ரவீனா டாண்டன். இவர் ஆளவந்தான் படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை. மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது 2001க்கு பிறகு இப்போதுதான் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.
24 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் நடிகை

இவர் லாயர் படத்தில் நடிப்பதற்கு குறித்து அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. மேலும் ரவீனா வழக்கறிஞராக நடிப்பது அந்த போஸ்டரில் தெரிய வந்திருக்கிறது. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகிறது.
ரவீனா பாலிவுட் சினிமாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்தார். மேலும் கன்னட மொழியில் யாஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற கே ஜி எஃப் 2 படத்தில் பிரதமராக நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருந்தார்.
இப்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் மட்டும் ரவீனாவுக்கு கிளிக் ஆனால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட வாய்ப்பிருக்கிறது.