Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், தலைமறைவாக இருந்து தில்லாலங்கடி வேலை பார்த்து வரும் பசுபதி இருக்கும் இடத்தை நவீன் கண்டுபிடித்து விட்டார். அத்துடன் பசுபதி ஆட்களால் வெண்ணிலாவுக்கு பிரச்சனை என்று தெரிந்ததும் காவிரிக்கு தகவலை கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு போனார். ஆனால் அதற்கு முன் காவேரி, ஆஸ்பத்திரிக்கு சென்று வெண்ணிலாக்கு வரும் ஆபத்தை தடுத்து விட்டார்.
பிறகு எப்படியாவது பசுபதியை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டும் என்று நவீன் பசுபதி இருக்கும் இடத்திற்கு போனார். ஆனால் அங்கே பசுபதி இடம் நவீன் மாட்டிக் கொண்டார். பிறகு பசுபதி வீக்னஸ் ஆக இருக்கும் ராகினியை மடக்கி பசுபதியை பிடித்து விடலாம் என்று நவீன், ராகினி கழுத்தில் கத்தியை வைத்து பசுபதியை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர பிளான் பண்ணி விட்டார்.
அதனால் பசுபதிக்கு வேறு வழி இல்லாமல் நவீன் சொன்னதை கேட்கும் படி நிலைமை ஆகிவிட்டது. அடுத்ததாக வெண்ணிலாவின் மாமாவை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டும் என்று குமரன் எடுத்த முயற்சியில் சில தடங்கல்கள் ஏற்பட்டு விட்டது. ஆனால் அதெல்லாம் முறியடித்து வெண்ணிலாவின் மாமாவை கோர்ட்டுக்கு குமரன் கூட்டிட்டு வந்து விடுவார்.
அடுத்ததாக வெண்ணிலாவை எப்படியாவது பாதுகாப்பாக கோட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று காவேரி யாருக்கும் தெரியாமல் வெண்ணிலாவை ஆட்டோவில் கூட்டிட்டு வந்து கொண்டிருக்கிறார். இப்படி இவர்கள் மூன்று பேரும் சேர்ந்த கூட்டணியில் வெற்றி கிடைக்கும் விதமாக கோர்ட்டுக்கு வந்த விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப் போகிறது.
வெண்ணிலா மற்றும் வெண்ணிலா மாமா சொன்ன உண்மை படி பசுபதி ஜெயிலுக்குப் போகும் நிலைமை வந்துவிட்டது. அத்துடன் காவேரி கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக விஜய்யை வெண்ணிலாவிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்ப தயாராகி விட்டார்.
ஆனால் காவேரி கர்ப்பம் என்பதை தெரிந்து கொண்ட வெண்ணிலா இதன் பிறகும் இவர்களுடைய வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்று முடிவு பண்ணி விஜய்க்கு குட் பாய் சொல்லிவிட்டு காவிரியுடன் விஜய் சேர்த்து வைத்துவிட்டு மாமாவுடன் கிராமத்துக்கு போவதற்கு வெண்ணிலா தயாராகி விட்டார்.