Lokesh Kanagaraj : லோகேஷ் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இதற்கு காரணம் அவருடைய டைரக்ஷன் தான். லோகேஷ் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அந்த வகையில் ரஜினியின் கூலி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்போதே ப்ரோமோஷனை ஆரம்பித்து விட்டனர். இந்த சூழலில் லோகேஷ் மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறாராம் கமல்.
விக்ரம் படம் கமலின் கெரியரில் முக்கியமான படமாக இருந்தது. லோகேஷ் இந்த படத்தில் ஒரு தரமான சம்பவம் செய்த நிலையில் காரையே பரிசாக கமல் கொடுத்திருந்தார். மேலும் விரைவில் விக்ரம் 2 படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
லோகேஷ் மீது கோபத்தில் இருக்கும் பிரபலம்
ஆனால் கூலி படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தை லோகேஷ் தொடங்க இருக்கிறார். அடுத்ததாக விக்ரம் 2 எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கானின் படத்தை எடுக்க உள்ளார். ரஜினியின் கூலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருக்கிறார்.
லோகேஷ் உடன் பணியாற்றியது பிடித்த போக அமீர்கான் உடனடியாக தன்னை வைத்து ஒரு படம் எடுக்குமாறு கூறியிருக்கிறார். இதற்கு லோகேஷ் சம்மதம் தெரிவித்ததால் விக்ரம் 2 படம் தள்ளிப்போகிறது. மலையைப் பார்த்தவுடன் மரத்தை மறப்பதா என்ற பழமொழிக்கு ஏற்ப இருக்கிறது.
அதாவது அமீர்கான் படத்திற்காக கமல் படத்தை தள்ளி போடுகிறார். இதனால் கமலுக்கு வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அமீர்கான் படம் எடுத்து முடித்த பிறகு தான் விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் படங்களை லோகேஷ் எடுக்க இருக்கிறார். இதுதவிர ஹீரோவாகவும் லோகேஷ் களமிறங்குகிறார்.