Amazon prime : இப்போது சினிமாவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் திரைப்படத்தை விட OTT- இல் ரிலீஸாகும் திரைப்படங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அது ஒரு சோம்பேறித்தனமாகவும் மாறுகிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.
Kuberaa :
தற்போது நாகார்ஜுனா மற்றும் தனுஷ் நடிப்பில் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்ட குபேரா திரைப்படம் தற்போது அமேசான் பிரைமிலும் காண நேரம் வந்துவிட்டது. தேவா என்று தனுஷ் எடுத்த பிச்சைக்காரன் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்தத் திரைப்படம் நாளை ஒடிடி யில் வெளியாக உள்ளது.
Riff Riff :
ஆங்கிலத் திரைப்படமான “Riff Riff” நாளை அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ஒரு முன்னால் குற்றவாளி மனைவி மற்றும் தனது மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய கர்ப்பமான காதலி,முந்தைய மனைவி இவர்கள் எல்லாம் அவனுக்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள். இவை மையமாக வைத்து கதை நகருகிறது.
Juegos de Seduccion :
இந்த ஸ்பானிஷ் திரைப்படம் உலகமெங்கிலும் மக்கள் பார்க்கும் வகையில் அமேசான் பிரைமில் நாளை (ஜூலை 18) வெளியிடப்பட உள்ளது. ” செபாஸ்டின் மற்றும் அவரது நண்பர்கள் பெண்களை குறி வைத்து திருட்டுகளில் ஈடுபடுகின்றன. சில ஆபத்தான கட்டங்கள் மற்றும் மர்மமான விஷயங்களை கடந்து செல்கின்றன”. இப்படித்தான் மர்மமான முறையில் கதை நகர்கிறது.
Fight break sphere :
இது ஒரு சைனீஸ் தொடராக இருக்கிறது. சைனீஸ் தொடரை விரும்புவர்களுக்கு இது சுவாரசியமான பொழுதுபோக்காக அமையும். இந்தத் தொடர் நாளை அதாவது ஜூலை 18 அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாவதால் மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முதலில் எது வசூலில் அள்ளும் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. நாளை இந்த சுவாரசியமான திரைப்படங்கள் மற்றும் தொடர்களை கண்டு ரசியுங்கள்.