விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் 20 ஓவர்கள், டெஸ்ட் போட்டிகள் என இரண்டிலும் ஓய்வு முடிவை அறிவித்து விட்டனர். இன்னும் எஞ்சியுள்ள ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட திட்டமிட்டுள்ளனர், ஆனால் அதற்கும் இப்பொழுது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ரூபத்தில் ஆபத்து வந்துவிட்டது.
இந்த இரண்டு பார்மெட்டிலும் இருந்து ஓய்வு பெறும்போது ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, ஏன் இந்த முடிவு என வர்ணனையாளர் கேட்டதற்கு, வருகிற 2027 உலக கோப்பைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காகவும், அதை வெல்வதற்கு முயற்சிப்பதற்காகவும் தான் இந்த முடிவு என கூறினார்.
இப்பொழுது அதற்கும் பிரச்சனை எழுந்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகிறார். தொடர்ந்து விளையாடினால் தான் இவர்கள் பிட்னஸ் மற்றும் ஆட்டத்திறன் பற்றி தெரிய வரும்.
ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை வந்து ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடினால் இந்திய அணியின் நிலைமை என்ன ஆகும் என கௌதம் கம்பீர் பிசிசிஐ இடம் கேள்வி எழுப்பி வருகிறார். எப்படி பார்த்தாலும் கம்பீர் கேட்பது சரிதான் என முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் இவர்கள் இருவரும் ஒரு நாள் போட்டியிலும் கூடிய விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ரோஹித் சர்மா குடும்பத்துடன் லண்டனில் செட்டிலாக உள்ளார். அதற்குண்டான வேலைகளையும் செய்து விட்டார். இப்படி உலகக்கோப்பை கனவு நிறைவேறாவிட்டாலும் லண்டன் கனவு நிறைவேறி விட்டது.