Rajini : கடந்த சில நாட்களாகவே கூலி படத்தை பற்றிய செய்திகள் தான் இணையத்தில் உலாவி வருகிறது. அதாவது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
இதன் காரணமாக படத்தின் பிரமோஷனை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இடம்பெறாது என்ற செய்தி வந்தது. ஆனால் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதால் கண்டிப்பாக இவை வெளியாகாமல் இருக்காது.
மேலும் கூலி படம் எல்சியுவில் இடம்பெருமா என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் படத்தின் கதையை சொல்லும்போதே லோகேஷுக்கு ரஜினி கட்டளை போட்டு விட்டாராம். அதாவது இந்த படத்தில் எல்சியு சமந்தமாக எதுவுமே இருக்கக்கூடாது.
லோகேஷுக்கு ரஜினி போட்ட கட்டளை
ஒவ்வொரு கதாபாத்திரமாக வந்தால் தன்னுடைய படத்தில் கமல் மற்றும் விஜய் போன்றோரின் குரல் மற்றும் காட்சிகள் இடம் பெற்றால் அதற்கு தான் கைத்தட்டல் அதிகமாகும். இது ரஜினிக்கு இருக்கும் மௌசை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இது லோகேஷின் எல்சியூவில் இடம்பெறக்கூடாது என்பதில் ரஜினி உறுதியாக இருந்துள்ளார்.
லோகேஷும் ரஜினியின் கட்டளைக்கு ஒப்பு கொண்டிருக்கிறார். மேலும் படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். ஆகையால் படம் பக்கா மாஸாக இருக்கப் போகிறது.
லியோ படம் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்த நிலையில் அதை முறியடிக்கும் வகையில் ஒரு தரமான கம்பேக் லோகேஷ் கொடுக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த கையோடு கைதி 2, அமீர்கானின் படங்கள் லோகேஷின் கைவசம் இருக்கிறது.