சின்ன மருமகள் சீரியலில் ஈஸ்வரி தன் பையன் போஸை தமிழ் செல்வி போலீசிடம் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக தமிழ் மீது பாசமாக இருப்பது போல தனது நாடகத்தை ஆரம்பித்து விடுகிறாள்.
இன்னொரு பக்கம் சேதுவோ சாவித்திரி தாமரை பேச்சை கேட்டு தமிழ் செல்வியை காலேஜீக்கு போக வேண்டாம் என்று சொல்கிறான். காலேஜீக்கு போகணும் ஆசைபட்டால் உன் அப்பன் வீட்டிற்கு திரும்ப போய்விடு என்று சாவித்திரியும் தமிழை திட்டுகிறாள்.
ஆறுமுகமோ தன்னுடைய அக்காவிற்கு இதயத்தில் பிரச்சனை அதனால் உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்லவும் பாட்டி இவன் தான் தன் குடும்பத்திற்கு அடுத்த வில்லன் என்று தெரியாமலேயே அவனுக்கு ரூ 25,000 கொடுத்து உன்னுடைய அக்காவை பத்திரமா பார்த்துக்கோ என்று அனுப்பிவிடுகிறாள்.
மறுநாள் தமிழ் செல்வி காலேஜீக்கு போனவுடன் professor நீ ஏன் இவ்வளவு நாள் காலேஜீக்கு வரலை நீ கிளாஸ் ஐ விட்டு வெளியே போ என்று அனுப்பி விடுகிறார் இதனால் மனமுடைந்த தமிழ் எனக்கும் என் கணவருக்கும் Divorce case நடந்துட்டு இருக்கு அதான் என்னால் கிளாஸ் அட்டென்ட் செய்ய முடியவில்லை என்று கூறியதும் ஓகே ஓகே இனி மேல் நீ கிளாஸ் அட்டென்ட் செய்யலனா TC கொடுத்து அனுப்பி விடுவோம் என்று proffessor எச்சரிக்கை கொடுக்கிறார்.
வீட்டிற்கு வந்தா சேதுவோட தொல்லை காலேஜ்-க்கு வந்தா proffessor தொல்லை பிறகு தன்னுடைய சின்ன வயது பிரண்ட் ‘சக்தியோட தொல்லை. இதையெல்லாம் தாண்டி தமிழ் செல்வி எப்படி தன் டாக்டர் கனவை நிறைவேற்றுவாள் என்பதை பார்க்கலாம்.