Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ஹோட்டலில் பிரச்சனை ஏற்படுத்தி ஹோட்டலை மூட வைத்து பாக்யாவை ஜெயிலுக்கு அனுப்ப வைக்க வேண்டும் என்று சுதாகர் பிளான் பண்ணினார். அதன்படி ஒரு ஆளை செட்டப் பண்ணி பிரச்சனையும் செய்தார். ஆனால் பாக்கியவுடன் சப்போர்ட்டாக ஒட்டுமொத்த குடும்பமும் நின்ற நிலையில் அந்த நபர் பொய் சொல்லி ஏமாற்றினார் என்று போலீசுக்கு தெரிய வந்துவிட்டது.
உடனே அந்த நபர் போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இருந்தாலும் இந்த நபர் பொய் சொன்னதற்கான காரணம் என்று ஒட்டுமொத்த குடும்பமும் யோசித்து நிலையில் அந்த நபரும் சுதாகரும் பேசிக் கொண்டிருந்ததை கோபியும் எழிலும் பார்த்து விடுகிறார்கள். உடனே கோபப்பட்ட எழில், சுதாகரை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று கிளம்பினார்.
ஆனால் கோபி அதெல்லாம் வேண்டாம் நாளைக்கு இனியாவின் விவாகரத்து கோர்ட்டுக்கு வரப்போகிறது. இந்த சமயத்தில் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று வீட்டிற்கு கூட்டிட்டு போய் விடுகிறார். வீட்டுக்கு போனதும் சுதாகர் செய்த வேலையை எல்லாத்துக்கும் சொல்லிய நிலையில் இனியா அவங்களை சும்மா விடக்கூடாது என்று அவர்களிடம் சண்டை போடுவதற்கு வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
ஆனால் எல்லோரும் இனியாவை தடுத்து சமாதானப்படுத்தி விட்டு எதனாலும் விவாகரத்து வாங்குனதுக்கு அப்புறம் பேசிக் கொள்ளலாம். நமக்கு அவங்களிடம் இருந்து விவாகரத்து கிடைத்தால் அதுவே போதும் என்று அமைதியாக இருக்க சொல்கிறார் கோபி. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கோபி பாக்கியம் மனதில் இடம் பிடிக்கும் விதமாக அந்த வீட்டில் ஒருவராக மாறிக்கொண்டே வருகிறார்.
இப்படிப்பட்ட கோபி தான் ஒரு காலத்தில் பாக்கியாவை ஒட்டுமொத்தமாக வெறுத்து வந்தார். ஆனால் தற்போது பாக்கிய தான் நமக்கு எல்லாமே என்று ஒரேடியாக பாக்கியாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார். மேலும் இனியா விவாகரத்து கோர்ட்டுக்கு வரும் நிலையில் சுதாகர் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் ஈசியாக விவாகரத்துக்கு ஓகே சொல்ல மாட்டார்கள். இதை வைத்து பாக்கியாவிற்கும் இனியாவிற்கும் பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக ஏகப்பட்ட குளறுபடிகளை பண்ணப் போகிறார்கள்.