Blue sattai maran : ப்ளூ சட்டை மாறன் அவர்கள் பொதுவாக எந்த ஒரு படம் வந்தாலும் அதைப்பற்றி அவருடைய கண்ணோட்டத்தில் சில கருத்துக்களை முன் வைப்பார். அந்த கருத்தானது சில நேரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் சில நேரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாததாக கூட இருக்கும்.
இவர் இது போல நிறைய படங்களின் விமர்சனங்களை அவரது கண்ணோட்டத்தில் முன்வைத்து வெற்றி பெற்ற படங்களும் ஏராளம். இவர் இந்த படம் தோல்வியை தழுவ போகிறது என்று ஜோசியர் போல கணித்து சொன்னதும் ஒரு சில படங்கள் தோல்வியடைந்ததும் உண்டு.
இவர் தற்போது அவரது X வலைதளத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதாவது நீங்கள் எடுக்கிற படம் நல்லா இருக்கோ இல்லையோ. ஆனா ரிலீசுக்கு முன்னாடியும் பின்னாடியும் கொடுக்கிற பில்டப் எல்லாம் பிரமாதமா இருக்குது. என மதராசி பட போஸ்டரை போட்டு கூறியுள்ளார். இன்னும் 50 நாள் இருக்காம் எல்லோரும் பொறுமையாக காத்திருங்க என்றும் அதில் எழுதியுள்ளார்.
ஓவர் பில்டப் கொடுத்தே படத்தை கவிழ்த்து விட்டிடுறாங்க..
இவ்வாறு இவர் கொந்தளித்ததற்கு காரணம் கூலி மற்றும் ஜனநாயகம் அப்டேட்டா இருக்குமோ? என்ற கேள்வி அனைவரும் மனதிலும் எழுகிறது. ஆனால் முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆன பிறகுதான் இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளது என்று தெரியும். ஆனால் இன்று இருக்கும் தொழில்நுட்பத்தில், ஒரு படம் எந்த தேதியில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் படக்காட்சி எந்த நிலையில் உள்ளது.
இவ்வாறு ஒரு படத்தைப் பற்றிய அத்தனை விவரங்களும் முன்கூட்டியே தெரிய வருகின்றன. இன்னும் முன்கூட்டியே கதை முதற்கொண்டு சில நேரங்களில் யூகிக்கக்கூடிய அளவில் உள்ளது. இவர் கூறியிருப்பது போல ஓவர் பில்டப் ஒரு சில நேரங்களில் படங்களை கவிழ்த்து விடும்.
ஒரு சில நேரங்களில் சில படங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். எப்படியும் கதை நன்றாக இருந்தால், கதாபாத்திரங்கள் நன்றாக நடித்திருந்தால் படம் கிட்டாகத்தான் போகிறது. இதற்கு முன்,பின் கொடுக்கும் பில்டப் தேவையா, தேவையில்லாததா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை பொறுத்து.