TVK : “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். இவர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது நான் சினிமா துறையை முற்றிலும் துறந்து, அரசியலில் களம் இறங்க உள்ளேன் என்று அறிவிப்பும் கொடுத்தார்.
இதைக்கண்டு ரசிகர்கள் மனவருத்தப்பட்டாலும், மனதை தேற்றிக்கொண்டு விஜய் அவர்களை திரையில் பார்க்காவிட்டால் என்ன, அரசியல் களத்தில் பார்த்துக் கொள்வோம் என தொண்டர்களாக தீவிரமாக இறங்கி விட்டனர்.
தனக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் ரசிகர்களிடமிருந்து என்று சற்றும் எதிர்பார்க்காத விஜய். தன் கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி மிகப்பெரும் வரலாற்றையே உருவாக்கினார். இந்த செயல் மற்ற கட்சியினரை நடுங்க வைத்துவிட்டது.
அண்ணன் கட்சியை கூட்டணிக்கு அழைக்கும் TVK ..
தற்போது நடிகர் விஜய் அவர்கள் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை மதுரை மாநகரில் நடத்தப் போகிறார் என அறிவிப்பு கொடுத்துள்ளார். அவர் மாநாடு நடத்தப் போவதாக குறிப்பிட்டிருந்த தேதி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் அன்று.
முன்னாள் நடிகரும், அண்ணன் இடத்தில் இருந்து தன்னை வளர்த்து விட்ட நடிகர். விஜயகாந்த் மீது இருக்கும் நன்றி கடனுக்காக விஜயகாந்த் அவர்களை பெருமைப்படுத்துவதற்காக, அவரது பிறந்தநாள் அன்று தனது கட்சி மாநாட்டை நடத்த உள்ளார் விஜய்.
இப்போது மற்ற கட்சியினர் அனைத்தும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஏன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் அன்று கட்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்று குழம்பி போய் நிற்கின்றனர். ஒருவேளை தேமுதிகவும், தவெகவும் கூட்டணி அமைக்க அடித்தளம் போடுகிறாரா விஜய்.
அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் அவர்ககளை தவறவிட்டு மனம் வருந்தி நிற்கும் மக்களை தன்வசம் இழுப்பதற்காக திட்டம் தீட்டுகிறாரா விஜய் என் என்ற கேள்வி அனைவரும் மனதிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் விஜய் அவர்கள் ஒவ்வொரு நகர்வையும் பார்த்து பார்த்து செய்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
யாருக்கு தெரியும், ஒருவேளை தவெக கட்சி மாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே,தேமுதிகவுடன் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாக போகிறதோ என்னவோ. பொறுத்திருந்து பார்க்கலாம் விஜய் அவர்களின் ராஜதந்திரத்தை.