Vijay Tv: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். அதிலும் பெண்களை கவரக்கூடிய சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி முதலிடம் பிடித்து விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான வினோதினி சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது சன் டிவியில் இந்த ஒரு சீரியல் தான் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு மக்களை கவர்ந்து விட்டது. இன்னும் சொல்ல போனால் இந்த சீரியலை ப்ரைம் டைமுக்கு மாற்றி ஒளிபரப்பு செய்யுங்கள் என்று மக்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு வினோதினி சீரியல் மக்கள் மனதை டச் பண்ணி விட்டது.
10 வருடமாக தன்னுடைய கணவர் வருவார் என்று இரண்டு குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வாழ்க்கையை நடத்தி வரும் வினோதினிக்கு திடீரென்று வீட்டுக்காரர் இறந்து விட்டார் என்ற செய்தி பெரிய இடியாக விழுகிறது. ஆனாலும் மாமியார் அரவணைப்புடன் அந்த வீட்டில் இருந்து கொண்டு போராடும் விதமாக வாழ்க்கை அமைவது தான் வினோதினி சீரியலின் கதையாக இருக்கிறது.
ஆனாலும் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நாயகன் கிருஷ்ணா, மனைவியை விட்டு தன் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்தான் வினோதினிக்கு ஆதரவு கொடுத்து வரும் வேளையில் இரண்டு பேரும் கடைசியில் ஒன்று சேர்வதாக கதை இருக்கும். இதே மாதிரி ஒரு சீரியல் தற்போது விஜய் டிவியில் புத்தம் புதுசாக வரப்போகிறது.
அந்த வகையில் மகளே என் மருமகளே என்ற சீரியலுக்கான புரோமோ வெளியாகிவிட்டது. இந்த சீரியலின் கதை அப்படியே வினோதினி மாதிரியே இருக்கிறது. நீ நான் காதல் சீரியலில் அபி கேரக்டரில் நடித்த வர்ஷினி, ரேஷ்மாவின் மருமகளாக வருகிறார். வர்ஷினிக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே கணவர் இறந்து போய் விடுகிறார். கணவராக சின்ன மருமகள் சீரியலில் தற்போது நடித்து வரும் சேது என்பவர் தான் வந்திருக்கிறார்.
இவர் இறந்தாலும் மகளை தன் மருமகளாக பார்த்து வரும் மாமியார் பாசத்துக்கு நடுவில் மருமகள் இருப்பது போல் இருக்கிறது. இவரை மறு திருமணம் செய்து கொள்ளும் விதமாக வருவது வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் கண்ணன் கேரக்டர் நடித்து வந்த கதாநாயகன். சன் டிவி வினோதினி சீரியலின் கதையை காப்பி அடித்து விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்கு பிளான் பண்ணிவிட்டது.