Cinema : சினிமாவில் எந்த திரைப்படம் வந்தாலும் பெரிய நடிகராக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏனென்றால் அவர்கள் தான் முன்னணி நடிகர்கள் ஆமாம்.
இப்படி பயங்கரமான வரவேற்பு கிடைத்து தியேட்டரில் ரிலீஸ் ஆகும் பெரிய ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் படம் தான் ஹிட் ஆகுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. அந்த திரைப்படத்தின் கதை, பாடல் மற்றும் கருத்தைப் பொருத்து, அந்த திரைப்படம் தியேட்டரில் ஓடுமா ஓடாதா என்று மக்கள் மத்தியில் தீர்மானிக்கப்படுகிறது.
தங்களது திரைப்படத்தை தியேட்டரில் ஓட வைத்து கலெக்ஷன் பார்க்க இயக்குனர்கள் முந்திக் கொண்டே தான் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படம் ஹிட்டாக வேண்டும் என்று கவர்ச்சியான பாடலையும் வெளியிடுவது, தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
ட்ரெண்டிங் இசை..
ஒரு இசையமைப்பாளர் பேமஸ் ஆகிவிட்டால் அவர் அடுத்த படத்தில் தனது பட்ஜெட்டை உயர்த்துவார் மற்றும் பெரிய ஹீரோக்களின் படத்திற்கு மட்டும்தான் இசையமைப்பேன் என்று அடம் பிடிப்பார் இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஒரு இசையமைப்பாளர் சின்ன பட்ஜெட் திரைப்படத்திற்கெல்லாம் இசையமைக்க மாட்டேன் என்று மூஞ்சியில் அடித்த மாதிரி கூறியிருக்கிறாராம் அது யார் என்று இப்போது பார்க்கலாம்.
புது அத்தியாயம்..
ஷேன் நிகம் மற்றும் சாந்தனு நடித்துள்ள “பால்டி மூவி” என்ற திரைப்படம் ஆகஸ்ட் 29 அதாவது ஓணம் என்று திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பதற்கு முதலில் அனிருத்தை அணுகி உள்ளனர். படம் ரொம்ப சின்ன பட்ஜெட்டாக இருக்கிறதே என்று யோசித்து வேண்டாம் என கூறிவிட்டாராம்.
அதற்குப் பிறகுதான் சாய் அபயங்கர் வாய்ப்பை நழுவுவிடாமல் சின்ன படமா இருந்தாலும் பரவாயில்லை என்று இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் இந்த இசையமைப்பாளருக்கு பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.