Suriya : சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய் பீம் படம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காவலாளியால் கொல்லப்பட்ட தனது கணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மனைவி போராடுகிறார். அவருக்கு சரியான நீதியை சூர்யா பெற்று கொடுக்கிறார்.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் ஞானவேல் இயக்கியிருந்தார். இதுபோன்ற படத்தை எடுத்ததற்கு சூர்யாவுக்கு பாராட்டுக்கள் அப்போது குவிந்தது. சமீபத்தில் இதேபோல் அஜித் குமாரின் லாக்கப் மரணம் தமிழகத்தையே உலுக்கியது.
இதற்கு பல பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். ஆனால் ஞானவேல், சூர்யா, கார்த்தி, வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் எதுவுமே பேசாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் பா ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்றோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மக்களின் பிரதிபலிக்கும் படங்களை எடுத்து வருகிறார்கள்.
சூர்யாவை விளாசிய சினிமா விமர்சனம்
அவ்வப்போது பொது மேடைகளிலும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களை பற்றி பேசி வருகின்றனர். ஆனால் இப்போது அஜித்குமார் பற்றி மௌனம் காப்பது எதற்காக என சினிமா விமர்சகர் பிரசாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சாத்தான்குளம் இரட்டை லாக்கப் மரணங்கள் நடந்த போது பொங்கிய நீங்கள் இப்போது மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள். அரசியல் கட்சியினருக்கு சாதகமாக இருக்கிறீர்களா என பிரசாந்த் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
சூர்யா எப்போதுமே சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுக்க கூடியவர். அப்படி இருக்கையில் தற்போது வரை அஜித்குமார் மரணம் குறித்து எதுவுமே பேசாமல் இருப்பது அவரது ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.