Anna : திருமணம் நடக்குமா நடக்காதா என்ற வேறு சூழ்நிலைகளைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது ரத்னாவின் திருமண நிகழ்ச்சிகள். இந்த வார TRP ரேட்டிங்கில் முதலில் உள்ளது இந்த அண்ணா சீரியல்.
சண்முகம் அறிவழகனின் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க கிளம்புகிறான். அந்நேரம் பரணி ஒரு போட்டோவை கொடுத்து கோபம் வரும்போது இந்த போட்டோவை பாருங்கள் என்று கூறுகிறார். பத்திரிகை வைக்க அறிவழகனின் வீட்டிற்கு சென்ற சண்முகத்தை இந்தப் பையனுக்கு எப்படி எல்லாம் பொண்ணு பார்க்கணும்னு நினைச்சேன் தெரியுமா என்று கூறி சண்முகத்தை அசிங்கப்படுத்தி விடுகிறான்.
கோபம் அடைந்த சண்முகம், பரணி சொன்ன மாதிரியே அந்த புகைப்படத்தை பார்த்தான். இந்தப் புகைப்படத்தில் ரத்னாவின் போட்டோ இருந்தது பார்த்து மன அமைதி அடைந்தான். அப்புறம் விஜயத்தின் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க செல்கிறான்.
எப்படி ரத்னாவின் கல்யாணத்தை தடை செய்வதென்று, வெங்கடேஷ் பேசிக் கொண்டிருக்கும்போது சண்முகம் வந்ததால் பரபரப்புடன், வெங்கடேசை மறைத்து வைத்த விஜயந்தி மற்றும் கௌதம். பின்னர் மிகவும் பதட்டத்துடன் சண்முகத்திடம் பேச தொடங்குகின்றனர். சண்முகத்திற்கு இவங்க பேசும்போது சந்தேகம் வருகிறது.
ஜவுளி எடுப்பதற்காக இரண்டு குடும்பங்களும் கடைக்கு வர திட்டமிட்டனர். முதலில் அறிவழகனின் குடும்பம் கடைக்குள் செல்கின்றன. “நம்ம அப்படியே பெரிய இடத்துல பொண்ணு கட்டுறோம்” அப்படின்னு ஜாடைமாடையாக குத்தி காமிக்கிறார் அறிவழகனின் அப்பா. பின்பு சற்று தாமதமாகி விஜயந்தி வருகிறாள்.
மாலதியிடம் சீக்ரெட் பேச்சு..
இந்நிலையில் அறிவழகன் உன்னை கெடுத்து விட்டான் என்று சொல்லு அப்பதான் திருமணம் நடக்கும் என்று மாலதி இடம் கூறுகிறான் வெங்கடேஷ். ரத்னாவுக்கும், அறிவழகனுக்கும் திருமணம் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறான் வெங்கடேஷ்.
சதி திட்டம் பழிக்குமா..?
அனைவரும் துனிக்கடையில் சேலையை செலக்ட் பண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், வீராவுக்கு கௌதம் எடுத்துக் கொடுத்த சேலையை விட சிவபாலன் எடுத்துக் கொடுத்து சேலையை பிடித்திருக்கிறது என்கிறாள் இதைக் கேட்டு கவுதம் மிகவும் வெறுப்பாகிறான். ஒரு வழியா இரண்டு குடும்பமும் ஷாப்பிங் செய்து முடித்தனர்.
கடன் வாங்கும் நிலைமை..
இந்நிலையில் சண்முகம் கொண்டு வந்த அனைத்து பணமும் முடிந்து விடுகிறது. கந்து வட்டி கடனும் வாங்கும் எண்ணத்தை நினைக்கிறான் சண்முகம். கல்யாணத்தை நிறுத்த வெங்கடேஷ் மற்றும் விஜயந்தி திட்டம் போட்டு வருகின்றனர். இந்நிலையில் தன் தங்கையின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடிப்பாரா? என்பது அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.