கடந்த நிதியாண்டில் மட்டும் பிசிசிஐ கொள்ள லாபம் பார்த்துள்ளது. இந்தியாவில் அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விளையாட்டு கிரிக்கெட். இதனை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் பிசிசிஐ வங்கியில்10,000 கோடிகள் வைப்புத்தொகை வைத்திருக்கிறதாம்.
இதன் மூலம் மட்டும் ஓராண்டுக்கு 987 கோடிகள் வட்டியாக பிசிசிஐக்கு கிடைத்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 2023-2024 காலகட்டங்களில் மட்டும் பிசிசிஐ 9,742 கோடிகள் வருமானம் ஈட்டி உள்ளது. இப்படி சம்பாதிப்பதன் மூலம் ஐசிசிஐக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடன் கொடுத்துள்ளது.
9,742 கோடிகளில் கிட்டத்தட்ட 59 சதவீதம் ஐபிஎல் என்னும் தங்க முட்டையிடும் வாத்து மூலம் கிடைத்துள்ளது. சுமார் 5,761 கோடிகள் ரூபாய் ஐபிஎல் தொடர் வசூலித்துக் கொடுத்துள்ளது. இதனால் தான் பிசிசிஐயின் தங்க முட்டை இடும் வாத்தாக ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது
இந்தியா விளையாடும் போட்டிகள், ஆடவர், பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் தொடர் என அனைத்து விதமான ஒளிபரப்பு உரிமைகளிலும் இருந்து 1200 கோடிகளுக்கு மேல் வருமானம் வருகிறதாம். ஐபிஎல் போட்டிகள் இல்லாமல் இந்தத் தொகையை ஈட்டி வருகிறது.
இப்படி வரும் வருமானங்கள் எல்லாம் சேர்ந்து பிசிசிஐயை உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக மாற்றி உள்ளது. இந்த முறை ஐபிஎல் போட்டி நடக்கும் போது பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்ட போதிலும் அதை ஒத்தி தான் வைத்தார்களே தவிர நிறுத்தவில்லை. ஆபரேஷன் சிந்துக்காக ஒரு வாரம் ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.