Kamal : 2025 தொடக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படங்கள் எல்லாமே தோல்வியை தான் கொடுத்தது. விடாமுயற்சி, தக் லைஃப் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி, குடும்பஸ்தன் போன்ற படங்கள் வெற்றி பெற்றது.
இந்த வருடம் இரண்டாம் பாதியில் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகும் படங்களை பார்க்கலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி படம் உருவாகி வரும் நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இதைதொடர்ந்து தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் இட்லிகடை படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இரண்டாம் பாதியில் காத்திருக்கும் 5 பெரிய படங்கள்
செப்டம்பர் 18ஆம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக சூர்யா மற்றும் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வருகிறது கருப்பு படம்.
சூர்யாவின் கங்குவா மற்றும் ரெட்ரோ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆகையால் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு கருப்பு படம் வெளியாகுவதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறனர். இந்த ஐந்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக கூலி படத்திற்கான பிரமோஷனை ஆரம்பித்து விட்டனர். லோகேஷ் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இந்த படத்தில் மிகப்பெரிய திரைப்பட்டாலுமே நடித்திருப்பதால் ஒட்டுமொத்த சினிமாவின் எதிர்பார்ப்பும் கூலி படத்தின் மீது இருக்கிறது.