Memes: வாங்குற சம்பளம் வீட்டு வாடகைக்கும் கரண்ட் பில்லுக்கும் சரியா போயிடுது. இதுல எங்க மத்த செலவெல்லாம் பார்க்குது என புலம்பும் நிலை தான். எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவே மாட்டேங்குதே என்ற புலம்பல் மிடில் கிளாஸ் மக்களிடம் உண்டு.

அதேபோல் கடன் பிரச்சனையில் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. ஒரு பிரச்சனையை முடிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ள புதுசா ஒரு ஏழரை வந்துவிடும்.

இதுல கல்யாணம் காது குத்துன்னு மொய் செலவு ஒரு பக்கம் ஸ்கூல் பீஸ், வீட்டு செலவு இன்னொரு பக்கம் என குடும்பத்தலைவர்கள் திக்கு முக்காடி போகின்றனர். இதற்காக பேங்கில் லோன் போட்டு திண்டாடும் நிலை தான்.

இதை நெட்டிசன்கள் எப்போதுமே மீம்ஸ் போட்டு கலாய்ப்பதுண்டு. எதுக்காக உங்க வீட்டை விக்கிறீங்க. எனக்கு இருக்கிற கஷ்டத்துக்கு இந்த தெருவையே விற்கணும் வீட்டோட விட்டுட்டேன்.

இருக்கிறத வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு சொல்றாங்க. நம்மகிட்ட இருக்கிறது கடனும் கஷ்டமும் தான். இத வச்சுட்டு எப்படி சந்தோஷமா இருக்கிறது.

மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீங்க. செலவு போக பத்தாயிரம் கடன் வாங்குற அளவுக்கு சம்பாதிக்கிறேன். இப்படியாக சோசியல் மீடியாவில் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது அதன் தொகுப்பு இதோ.