Gossip: அந்த டீச்சர் நடிகை கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பார். இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் நோ தான்.
அதேபோல் சம்பளம் பற்றி எல்லாம் அவர் யோசிப்பது கிடையாது. அதனால் அந்த ஆசையை காட்டி கூட அவரை நடிக்க வைக்க முடியாது. ஆனாலும் அவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் அடிமை.
எப்போதாவது படம் நடித்தாலும் அதில் அவர் பெயரை தட்டி சென்று விடுவார். அப்படித்தான் தற்போது வேர்ல்ட் ஹீரோவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கிறது.
வாய்ப்பை எல்லாம் தட்டி விடும் டீச்சர்
ஆனால் அதற்கு அவர் நோ சொல்லியிருக்கிறார். ஏற்கனவே ஹீரோவின் இன்னொரு படத்தில் நடிகை நடித்திருக்கிறார். அப்படி இருந்தும் கூட அவர் முடியாது என்று சொன்னது ஆச்சரியம் தான்.
ஆனால் இப்போது அவர் கைவசம் பெரிய புளியங்கொம்பு இருக்கிறது. வரலாற்று படத்தில் நடிக்க சம்மதித்திருக்கும் அவர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
பல ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தொடங்கும் அந்த படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. நடிகை அதற்காக ஏகப்பட்ட தேதிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.
இதுதான் நடிகை இப்போது வரும் பட வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல காரணம். அது மட்டும் இன்றி இந்த படத்திற்காக அவருக்கு இரு மடங்கு சம்பளம் கொடுத்திருப்பதாக கூட கிசுகிசுக்கப்படுகிறது.