Vijay: விஜய் தான் இப்போது அரசியல் வட்டாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அதற்கான நகர்வுகளை இவர் சத்தம் இல்லாமல் செய்து வந்தார். அதை அடுத்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்த பிறகு ஆட்டமே கலை கட்டியது.
ஆரம்பத்தில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட முக்கிய கட்சிகள் இப்போது திணற ஆரம்பித்துவிட்டது. எப்படியாவது இவரை ஓரங்கட்ட வேணும் என எல்லோரும் களமிறங்கி இருக்கின்றனர். அதிலும் ஆளுங்கட்சி தான் தன்னுடைய அரசியல் எதிரி என அவர் கூறிவிட்டார்.
அதேபோல் வரப்போகும் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி கிடையாது. மத்திய ஆளும் கட்சியினருடனும் கூட்டணி கிடையாது என்று கூறிவிட்டார். அப்படி என்றால் அவருடைய திட்டம் தான் என்ன என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.
2026 தேர்தல் கூட்டணி சாத்தியமா.?
இந்த சூழலில் அதிமுக தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி இந்த தீயை பற்ற வைத்துள்ளார்.
முக்கிய கட்சியுடன் கூட்டணி வைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. தேர்தல் வியூகத்தை வெளியில் சொல்ல கூடாது என அவர் சொன்னது தான் இந்த பரபரப்புக்கு காரணம்.
ஏற்கனவே காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் என்ற செய்தியும் பரவியது. தற்போது இந்த தகவல் ட்ரெண்டாகி வரும் நிலையில் விஜய்யின் முடிவு தான் இறுதியானது.
அதில் பிஜேபி உடன் அதிமுக கூட்டணி வைப்பது குறித்து அவர் ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அப்படி இருக்கும்போது 2026 இல் இந்த கூட்டணியுடன் அவர் இணைவது சாத்தியம் கிடையாது.
ஆனாலும் முக்கிய கட்சிகள் இவரை குறி வைத்துள்ளது. தற்போது மக்களிடம் அவருக்கான செல்வாக்கு உயர்ந்து வரும் நிலையில் TVK யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பு கலந்த கேள்வியாக இருக்கிறது.