Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா ராஜி சுகன்யாவை பற்றி எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து விட்டார்கள். இதனால் கோபப்பட்ட கோமதி, சுகன்யா களத்தில் பளார் பளார் என்று அறைந்து விடுகிறார். அப்பொழுது கூட சுகன்யா என் மீது எந்த தவறும் இல்லை, நான் எதுவும் பண்ணவில்லை என்று பொய் சொல்லி கோமதி மீது சத்தியம் பண்ண தயாராகி விட்டார்.
உடனே அரசி, எல்லாத்தையும் பண்ணிவிட்டு இப்பொழுது எங்க அம்மா மீது சத்தியம் பண்ணுகிறீர்களா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். நான் தப்பு பண்ணியதற்கு இவர்களுடைய தூங்கிவிட்டது தான் காரணம் என்று அரசி, சுகன்யாவை பற்றி சொல்லிவிடுகிறார். உடனே பாண்டியனும் திட்ட ஆரம்பித்த பொழுது கோமதி யாரும் எதுவும் சொல்ல வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சுகன்யாவை வெளுத்து விடுகிறார்.
அடுத்து அனைவரும் கோமதி சமாதானப்படுத்தி கூட்டிட்டு போன நிலையில் பழனி, இவள் என்னுடைய பொண்டாட்டியை இல்லை. இது ஒரு காரணமாக வைத்து இப்பொழுதே அவளை அவளுடைய அம்மா வீட்டில் விட்டால் எனக்கு பெரும் நிம்மதி என்று சொல்கிறார். அத்துடன் இதுவரை சுகன்யாவிடம் பட்ட கஷ்டங்களையும் அனுபவித்த டார்ச்சர்களையும் பாண்டியனிடம் ஒன்று விடாமல் சொல்லிவிடுகிறார்.
இவ்வளவு நாளாக ஏன் சொல்லாமல் மறைத்தாய் என்று பாண்டியன் கேட்ட பொழுது கண்ண கசக்கி கொண்டு உங்க கிட்ட நிக்க சொல்றீங்களா? என்னுடைய தலையெழுத்து என் வாழ்க்கை இப்படி அமைந்து விட்டது இதற்கு யார் யார் என்ன பண்ண முடியும் என்று நான் தனியாகவே எல்லாத்தையும் அனுபவித்தேன் என்று சொல்கிறார். இதனால் சுகன்யாவின் முகத்திரை எல்லாம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது.
அதனால் கூடிய விரைவில் பழனிவேலுவிடமிருந்து சுகன்யா பிரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக அரசியை கூப்பிட்டு நல்லபடியாக படித்து முன்னேறு என்று பாண்டிய அட்வைஸ் பண்ணி விட்டார். இதற்கு அடுத்தபடியாக ராஜி கதிரின் திருமணம் பற்றிய ரகசியமும் வெளிவரப் போகிறது.