Vadivelu : தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னன் என்ற இடத்தை இன்று வரை தக்க வைத்துள்ளார். இவர் தமிழ் திரையுலகத்தில் தன் நகைச்சுவை மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.
இவர் 100 பெறப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நகைச்சுவை இன்றுவரை ட்ரெண்டிங்கில் தான் இருந்து வருகிறது. இவரை நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் நாடுகராகவும் நடித்துள்ளார். இவர் பாடி சில பாடல்களும் வெளியாகியுள்ளன நல்ல குரல் வலம் கொண்ட ஒருவர்.
இவர் நீண்ட கால இடைவெளிக்கு பின் மாமன்னன் படத்தில் ஒரு கடினமான கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்டார். இந்த படத்தில் “பஹத் பாசில்” மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து வடிவேலுடன் நடித்திருப்பர். “பஹத் பாசில்” மற்றும் வடிவேலு இரண்டு பேருமே நடிப்பில் மிரட்டியிருப்பார்கள்.
காலரை தூக்கி விட்டு, கெத்து காட்டிய வடிவேலு..
இவர்களது கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படமானது வருகிற ஜூலை 25 2025 அன்று வெளியாகவுள்ளது.
இதன் டீஸர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது அளித்த பேட்டி ஒன்றில் இந்த படம் மிக அருமையா வந்துள்ளது. இந்த படத்தை “சூப்பர் குட் பிலிம்ஸ்” தயாரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்த“மாரீசன்” படம் கண்டிப்பா அவார்டு வாங்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி கூறியுள்ளார் வடிவேலு. மீண்டும் இந்த படம் கண்டிப்பா கப் அடிக்கும், என காலரை தூக்கி விட்டு, கொஞ்சம் கெத்தாகதான் கூறியுள்ளார்.அதுவும் பெண்களுக்குத்தான் ரொம்ப பிடிக்குமாம்.
படம் வெளிவந்து நல்ல படமாக இருந்தால் எந்த படமாக இருந்தலும் நல்ல ரீச் கிடைக்கும். கதை நன்றாக வித்யாசமக இருந்தால் இன்னும் நிறைய வரவேற்பு கிடைக்கும், ஏன் அவார்டு கூட கிடைக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.