Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி விஜயாவிடம் என் பொண்டாட்டியிடம் இனி அதிகாரமாக பேசக்கூடாது. அவள் ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது, என்னுடைய மனைவி இந்த வீட்டு மருமகள் என்ற கௌரவத்தை கொடுக்க வேண்டும் என்று கரராக சொல்லி விடுகிறார். இதனால் விஜயா எனக்கு காபி வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
பிறகு ரோகிணி, ஷோரூமுக்கு வந்து மனோஜிடம் எனக்கு ஒரு ஆஃபர் வந்திருக்கிறது. மகாபலிபுரம் போக வேண்டும் நீயும் என்னுடன் வந்துவிடு ஒரு மூன்று நாள் இருந்துவிட்டு வரலாம் என கூப்பிடுகிறார். அதற்கு மனோஜ் எனக்கும் வர வேண்டும் என்று ஆசைதான், ஆனால் அம்மாவிடம் பெர்மிஷன் வாங்க வேண்டும். உன் மீது இருக்கும் கோபத்தினால் அம்மா நிச்சயம் உன்னுடன் என்னை அனுப்பி வைக்க மாட்டாங்க என்று சொல்கிறார்.
அதற்கு ரோகினி, இப்படியே அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு இரு. ஒரே ரூமில் நாம் இருவரும் ரூம் மேட் மாதிரி 75 வயசு வரை இருந்து கொள்ளலாம் என்று கோபமாக பேசிவிட்டு போய்விடுகிறார். இவர்கள் பேசுவதை கேட்ட ஷோரூமில் வேலை பார்க்கும் ராணி, ரோகினிடம் ஒரு ஐடியாவை கொடுக்கிறார். அதாவது புருஷன் நம்ம பேச்சைக் கேட்டுக் கொண்டு நாம் சொல்வதெல்லாம் கேட்கும் படி செய்வதற்கு கிராமத்தில் ஒரு லேகியம் இருக்கிறது.
அதை நீங்கள் உங்கள் வீட்டுக்காரரிடம் கொடுத்து விட்டால் உங்களை சுற்றி நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கும் படி ஆகிவிடுவார் என சொல்கிறார். உடனே ரோகிணியும் அந்த லேகியத்தை கொண்டுட்டு வரச் சொல்கிறார். அடுத்ததாக முத்து, அப்பாவை ஸ்கூலில் ட்ராப் பண்ணிட்டு வரும் பொழுது நடுரோட்டில் மயக்கம் போட்டு ரோகினி அம்மா விழுந்து கிடந்ததை பார்த்து விடுகிறார்.
உடனே அவரே ஆஸ்பிட்டலில் கூட்டிட்டு போயி சேர்க்கிறார். இன்னொரு பக்கம் விஜயா நடத்தி வந்த பரதநாட்டிய கிளாசில் லவ் ஜோடிகள் மூலம் பிரச்சனை வர ஆரம்பித்து விட்டது. அதாவது அதில் லவ் பண்ணிக்கிட்டு இருந்த அந்த பொண்ணு கர்ப்பமாகிவிட்டது. இதனால் மயக்கம் போட்டு விழுந்த நிலையில் விஜயா, டாக்டரை வர சொல்லி அந்தப் பெண்ணை செக் பண்ண சொல்கிறார்.
அதற்கு அந்த டாக்டர் நீங்க பாட்டியாக போறீங்க அந்த பொண்ணு கர்ப்பமாக இருக்கிறது என்று சொல்லி விஜயாவின் தலையில் இடியை தூக்கி போட்டு விடுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெண் வீட்டார்கள் நேரடியாக விஜயா வீட்டுக்கு சென்று விஜயாவை அடிப்பதற்கு போய் விட்டார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் வேடிக்கை பார்க்கும் பொழுது மீனா மட்டும் ஆத்திரத்தில் பொங்கி எழுந்து அடிக்க வந்தவர்களின் கையை தடுத்து விட்டு மாமியாருக்கு சப்போட்டாக பேச ஆரம்பிக்கிறார்.
மீனா முத்து சொல்வதை கேட்காமல் பரதநாட்டியத்தில் அந்த லவ் ஜோடியை நம்பி ஓவராக ஆட்டம் போட்டதற்கு விஜயாவுக்கு ஆப்பு வைக்கும் நேரம் வந்துவிட்டது. இனி இதனால் பரதநாட்டியத்தை ஒட்டுமொத்தமாக க்ளோஸ் பண்ணும் விதமாக விஜயாவின் நிலைமை பரிதாபமாக போகப்போகிறது. இதனை அடுத்து கிரிஷ் மூலம் ரோகிணியின் உண்மையான ரகசியம் வெளிவரப் போகிறது.