மணிரத்தினத்தின் தக்லைஃப் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. சொல்லப்போனால் கமலுக்கு இந்த படம் அடுத்த ஃபிளாப் வரிசையில் இடம் பிடித்தது. ஏற்கனவே இந்தியன் 2 படம் அவருக்கு மோசமான அனுபவத்தை பெற்றுக் கொடுத்தது. சங்கர் சம்பாதித்த மொத்த பெயரையும் ஒரு கை பார்த்தது.
இப்பொழுது கமலின் அடுத்த ப்ராஜெக்ட் ஸ்டண்ட் மாஸ்டர்களாகிய அன்பு மற்றும் அறிவு இயக்கப் போகும் படம் தான். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறார்கள். படத்திற்காக கமல் 90 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு ஹீரோயின் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் ஹீரோயினாக சாய் பல்லவியை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் அவர் பிஸி ஷெடியூல் காரணமாக இப்பொழுது இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடிப்பதை விட வேறு என்ன வேண்டுமென அனைவரும் கரித்துக்கொட்டி வருகிறார்கள்.
ஆனால் சாய் பல்லவி விலகியதற்கு இது காரணம் இல்லை என ஒரு தரப்பு பேசி வருகிறார்கள். அதிக சம்பளம் கொடுத்தால் கூட இந்த வாய்ப்பை வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். சாய்பல்லவி நடிப்பதாக இருந்தாலும் ஒரு எத்திக்ஸ் வைத்திருக்கிறார்.
கமல் கூட நடித்தால் சில காட்சிகளில் கிளாமர் ரோல் இருக்கும். அது மட்டும் இல்லாமல் ஒன்று இரண்டு முத்த காட்சிகளும் இடம்பெறும், இதனால் தான் சாய் பல்லவி மறுத்துள்ளார் என்றும் கூறி வருகிறார்கள். இப்பொழுது மாநாடு படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷினி இடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.