Vijay : விஜய் அவர்கள் அரசியலில் களம் இறங்கி பல மாதங்கள் ஆன நிலையில், தற்போது ரசிகர்கள் தொண்டர்கள் ஆகி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். 2026 விஜய் அவர்களுக்கு முதல் தேர்தல் என்பதால், முன்கூட்டியே தேர்தல் காலத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார்கள் தொண்டர்கள்.
இந்த நிலையில் “யாதும் அறியான்” என்ற படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு “யாதும் அறியான்” படம் ட்ரைலர் வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. ஏனென்றால் அந்த ட்ரைலர்-ல் இடம்பெற்ற கட்சி அப்படி.
ஆமாம், அந்த ட்ரெய்லரில் இறுதியாக வரும் காட்சிகளில் டீக்கடையில் செய்தித்தாள் போஸ்டர் தொங்க விட்டிருப்பார்கள். அதில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு என்ற வாசகம் குறிப்பிட்டு இருக்கும். இதனால் இந்த ட்ரெய்லர் மிகப் பிரபலமாக பேசப்பட்டது.
அப்போது “யாதும் அறியான்” பட இயக்குனரிடம் கேட்டதற்கு, நான் எந்த ஒரு கட்சியையும் எதிர்த்து இதை செய்யவில்லை எனது சுய விருப்பத்தின் பேரில், நான் விஜயின் தீவிர ரசிகர் அதனால் இவ்வாறு நான் காட்சியை கொடுத்துள்ளேன் என கூறினார். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
மனமுடைந்த விஜய் ரசிகர்கள், பதில் சொல்ல முடியாத இடத்தில “யாதும் அறியான்” டீம்
ஆனால் அதே மகிழ்ச்சியோடு “யாரும் அறியான்” படத்தை பார்க்க சென்றவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார் இயக்குனர். இந்த காட்சி இடம்பெற்றதை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆர்வமாக சென்றுள்ளனர். ஆனால் இந்த படத்தில் இந்த காட்சியானது கனவு காட்சியாக வைக்கப்பட்டுள்ளதாம்.
இதைப் பார்த்து ரசிகர்கள் மனம் உடைந்து விட்டார்கள். மேலும் இது ஒரு கனவு காட்சியாக இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் மனதை மிகவும் பாதித்துள்ளது. ஆனால் ஒரு சில ரசிகர்கள் கனவு காட்சிகளில் கூட இந்த மாதிரி வைப்பதற்கு யோசனை வந்ததற்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி வருகிறார்கள்.
இதைப் பற்றி இயக்குனர் அவர்கள் கூறுகையில் நான் எந்த கட்சிக்கும் சார்பாக இதை செய்யவில்லை. இந்த படத்தின் கதைக்களம் அவ்வாறு இருக்கிறது படத்தை பார்த்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று கூறியுள்ளார்.