Vijay : பெரும்பாலான ரசிகர்களுக்கு விஜய் பாட்டுனாலே பிடிக்கும், அதும் அப்போ உள்ள 90s கிட்ஸ் பாட்டு எல்லாமே செம vibe-ஆ இருக்கும். டான்ஸ் அப்பாவும் சரி இப்போவும் சரி விஜய் அவர்கள் நடராகவே நடமாடக்கூடிய ஒருவர்.
நடிகர் விஜய் நடித்து படம் ஹிட் ஆகுதோ இல்லையோ ஆனா எல்லா பாடல்களுமே ஹிட் ஆகிரும். இப்போ வரைக்கும் விஜயின் ஆரம்பகால பாடல்கள் எல்லாமே நாம் முணுமுணுத்து கொண்டுதான் இருக்கிறோம்.
விஜய்க்காக ஏகப்பட்ட பாடகர்கள் பாடல்களை பாடி கொடுத்துள்ளனர். எல்லாம் சரிதான், ஆனால் தன் மகனுக்காக சோபா அம்மா பாடிய பாடல்கள் ஸ்பெஷல் தானே. அதும் இவங்க பாடுன பாட்டு எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்த பாடல்களாம்.
மகன் விஜய்க்காக சோபா பாடிய 7 பாடல்கள்..
ரசிகன் : இந்த திரைப்படத்தில் சோபா அம்மா விஜய்க்காக 2 பாடல்கள் பாடியுள்ளாராம், “லவ் லவ் மாமா” என்ற பாடலையும், “பம்பாய் சிட்டி” என்ற பாடல்களையும் பாடியுள்ளார்.
விஷ்னு : இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சங்கவி இனனிந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தில் “தொட்ட பேட்டா ரோடு மேல” பாடலை படியுள்ளாராம் சோபா.
ஒன்ஸ்மோர் : இந்த படத்தில் விஜய், சிம்ரன், சிவாஜிகணேசன், சரோஜா தேவி நடித்திருப்பார்கள். இந்த படத்தில் “ஊர்மிளா” பாடலை பாடியுள்ளார் சோபா.
திருப்பாச்சி : திருப்பாச்சி படத்தில் அசின், விஜய் நடித்திருப்பார்கள். இதுல நயன்தாரா அவர்கள் ஒரு பாடலுக்கு டான்ஸ் பாடியிருப்பார். இந்த “கோடம்பாக்கம் ஏரியா” பாடலை சோபா பாடிக்கொடுத்திருப்பார்.
வேட்டைக்காரன் : இந்த படத்தில் விஜய் மற்றும் அனுஷ்கா நடித்திருப்பார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற “என் உச்சி மண்டைல “ பாடலை பாடியிருப்பார் சோபா.
சுறா : இது விஜய்யின் 50ஆவது படம், இந்த படத்தில் விஜய் மற்றும் தமன்னா இணைந்து நடித்திருப்பார்கள். இதில் “நான் நடந்தால் அதிரடி” என்ற பாடலை பாடியிருப்பார் சோபா. இப்படி இவர் தன மகனுக்காக பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.