Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழனுக்கும் நிலாவின் அப்பாவுக்கும் வாக்குவாதம் வந்த நிலையில் நிலாவின் அப்பா இன்னும் ஒரு வாரத்தில் என்னுடைய மகளாக என் வீட்டுக்கே நிலா திரும்பி வந்துவிடுவார் என்று சோழனிடம் சவால் விட்டார். சோழனும் மாமனாருக்கு சவால் கொடுக்கும் விதமாக நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்காது என்று சொன்னார்.
ஆனால் நிலாவின் அப்பா இதற்கு அஸ்திவாரம் போடும் விதமாக சேரனை சந்தித்து நல்லபடியாக பேசி வீட்டிற்கு வந்து விடுகிறார். வீட்டிற்கு வந்த அப்பாவை பார்த்ததும் நிலாவும் சந்தோஷப்படுகிறார். அத்துடன் சோழன் நானும் பேசினோம், கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டில் வந்து இருங்க என்று நிலாவிடம் சொல்கிறார். நிலாவும் அப்பா சொல்வதை நம்பி விடுகிறார்.
ஆனால் மாமனார் என்ன காரணத்துக்காக கூப்பிடுகிறார் என்று சோழனுக்கு தெரிந்த நிலையில் எப்படியாவது போகவிடாமல் தடுக்க வேண்டும் என்று நிலாவின் இன்டர்வியூ பற்றி சொல்லி தடுக்க பார்க்கிறார். ஆனால் இந்த விஷயம் எதுவும் சேரனுக்கு தெரியாததால் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. இரண்டு பேரும் முதலில் போயிட்டு வாங்க என்று அனுப்புகிறார்.
அந்த வகையில் மாமனார் சோழனை பார்த்து இன்னும் ஆறு நாள் தான். அதற்குள் நிலா என்னுடைய மகளாக திரும்ப என் கூடவே வந்து விடுவார் என்று சொல்கிறார். பாண்டியனுக்கு எல்லாம் தெரிந்ததால் நடப்பதை பார்த்ததும் அவ்வளவுதான் உன்னுடைய சோழி முடிஞ்சிடுச்சு என்று சோழனிடம் சொல்கிறார். இதனால் பயத்தில் சோழன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிலா கூப்பிட்டதும் பின்னாடியே வீட்டிற்கு போய் விடுகிறார்.
அங்கே போனதும் சோழனுக்கு மறைமுகமாக டார்ச்சர் கொடுத்து நிலாவுக்கு சோழன் கெட்டவன் என்பது போல் தெரியும் படி ஒட்டுமொத்த குடும்பமும் காய் நகர்த்தப் போகிறார்கள். ஆனால் நிலாவை பொருத்தவரை சோழன் எப்படிப்பட்டவன், அவங்க குடும்பத்தில் இருக்கும் பொழுது எப்படி இருந்தான் என்பது தெரிந்ததால் நிச்சயம் அப்பா போடும் டிராமாவை புரிந்து கொண்டு சோழனுடைய வந்துவிடுவார். கடைசியில் நிலாவின் அப்பா தோற்றுப் போய் நிற்பார்.