Cinema : மலையாள சினிமாவில் ஒரு பெரிய வரவேற்பு மிகுந்த ஹீரோ என்றால் அது மோகன் லால், மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் அவர் பேமஸ். அவர் தனது சிறந்த நடிப்பு மற்றும் குரலால் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
தந்தையாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் தனது நடிப்பை வெளிபடுத்தும் திறன் கொண்டவர். தமிழ் ரசிகர்களின் மனதில் இவருக்கென்று ஒரு தனி இடமே இருக்கிறது.
இதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தது. ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன் லால் கேமியோ கதாபாத்திரம் தமிழ் மக்களின் மனதில் மேலும் ஒரு இடத்தை பிடித்தது.
திடீர் திருப்பம்..
தற்போது இயக்குனர்கள் மோகனலாலின் கால் சீட்க்காக, காத்து கொண்டிருக்கின்றனர். மலையாளம் மற்றும் தமிழில் இரு மொழிகளிலும் நடித்து கலக்கும் இவருக்கு தமிழ் சினிமா வாய்ப்பு அதிகம் குவிந்து கொண்டு வருகிறது.
தல அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உடன் மோகன்லால் இணையும் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறது. இதனால் மோகன் லாலுக்கு தமிழ் சினிமாவில் மவுஸ் கூடிக் கொண்டே போகிறது. நம் தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் ரஜினிகாந்த், கமல் இவர்கள் இருவருமே மோகன்லால் ஒரு லெஜெண்ட் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.
மோகன்லாலின் கால் சீட்டுக்காக இயக்குனர்கள் கால் வலிக்க காத்திருக்கின்றனர் என்ற செய்தி வளைத்தளத்தில் தற்போது உலா வருகிறது. உங்களுக்கு தமிழ் ஹீரோ யாரும் கிடைக்கவில்லையா என்று பல இணையவாசிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன.