Ajith : நடிகர் அஜித் சினிமாத்துறையை தாண்டி பல ஆத்மார்த்தமான ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட ரசிகர்களும் உள்ளனர். இவரது வாழ்க்கையே இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது என்றே கூறலாம்.
இவர் உடம்பு இருக்கக்கூடிய நிலையில் இவர் திரையில் நடித்தாலே போதும், இவர் மிகவும் கஷ்டப்பட்டு சண்டைக்காட்சிகளோ, நடனமோ ஆட வேண்டாம் தல தரிசனம் எங்களுக்கு கிடைத்தாலே போதும் என்றும் ரசிகர்கள் உள்ளனர்.
பொதுவாக நன்றாக நடித்து, உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, நன்றாக நடனம் ஆடி, ஆபாச படக்காட்சிகள் கொஞ்சம் நடித்து இந்த மாதிரியான நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் எங்க தல பார்த்தாலே போதும் திரையில் அவர் ஒண்ணுமே செய்ய வேண்டாம் என்கிற அளவுக்கு ரசிகர்கள் கிடப்பது வரம்.
வெறித்தனமான சம்பவம் காத்திருக்கு ..
இவ்வாறு இருக்கும் தன ரசிகர்களுக்காக அஜித் சார் ஆசைப்பட்டு நடித்த படம்தான்“குட் பேட் அக்லி”. ரசிகர்கள் முற்றிலும் எதிர்ப்பார்க்காத ஒரு கதை, அப்படி ஒரு தோற்றம், கூடவே காமெடியும் கலந்து தரமான இயக்கத்தை கொடுத்திருப்பார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இப்போது வந்துள்ள தகவல் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது அஜித் ரசிகர்களுக்கு. மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் ,அஜித் இணைய உள்ளார்களாம். இது “குட் பேட் அக்லி” போல் இருக்காதாம். முற்றிலும் வேற மாதிரியான அஜித் பார்ப்பீங்க- னு சொல்லிருக்காரு ஆதிக். மசாலா படமாகவும் இருக்குமாம்.
அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி துறைமுகம் பின்னணியில் படக்காட்சி உள்ளதாம். அதிகாரபூர்வமாக இந்த தகவலை தெரிவித்துள்ளனர், அதுமட்டுமல்லாமல் “குட் பேட் அக்லி”படத்தை விட இது வேற மாதிரி தரமான சம்பவமா இருக்குமாம். அஜித் ரசிகர்ளுக்கு வாயில் சக்கரை போட்டது போல் இருக்கும் இந்த செய்தி.