Nithyamenon : தமிழ் சினிமா துறையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை நித்யா மேனன். தனது கடின உழைப்பாலும் ,திறமையாலும் இன்றளவும் சினிமா துறையில் மவுஸ் குறையாமல் பேமஸான நடிகையாக ஜொலித்து வருகிறார்கள்.
180 திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம், பல லட்சக்கணக்கான ரசிகர்களை சேர்த்த நடிகை நித்யா மேனன். இதைத்தொடர்ந்து விஜயுடன் மெர்சல் மற்றும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்திலும் ஹிட் கொடுத்தார்.
ஆரம்பத்தில் தனது உடல் அமைப்பால் கேலி கிண்டலுக்கு ஆளான இவர் எதையும் கண்டுக்காமல் தட்டி விட்டு, தனது கடும் முயற்சியால் மட்டுமே இந்த நிலைக்கு வந்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் இவரது நடிப்பிற்கு தேசிய விருதும் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டது.
இட்லியா? பரோட்டாவா?..
தனுஷ் உடன் இட்லி கடை படத்தை முடித்துவிட்டு தான் விஜய் சேதுபதியுடன் இணைந்து தலைவன்தலைவி திரைப்படத்தின் சூட்டிங்கை தொடங்கினார் நித்யாமேனன். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு திரைப்படங்களிலுமே ஒரே மாதிரியான கதாபாத்திரமாக அமைந்திருப்பது ஆச்சரியம் தான்.
இட்லி கடை படத்தில் மாவு ஆட்டுவது போன்ற பெண்ணாகவும், தலைவனதலைவி திரைப்படத்தில் பரோட்டா போடும் ஒரு குடும்பத் தலைவியாகவும் நித்யா மேனன் நடித்துள்ளார். தலைவன் தலைவி வருகிற ஜூலை ௨௫ ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
நித்யா மேனன் மாவாட்டுகிறாரா? இல்லை புரோட்டா சுடுகிறாரா? என்று கேலிக்கையான பேச்சு சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதைப் பற்றி இயக்குனர் பாண்டியராஜ் பேசுகையில், இட்லி கடை படத்தில் நித்யா மேனன் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எங்களுக்கு தெரியாது என்று பேசி இருக்கிறார்.