Pradeep ranganathan : சினிமாவில் ஆர்வம் காட்டே முதலில் இயக்குனராக இருந்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இளைய ரசிகர்களை சேர்த்தார். பல திரைப்படங்களும் வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறது.
அதன் பின் இவர் நடித்த டிராகன் திரைப்படமும் பயங்கரமான ஹிட்டை கொடுத்தது. இந்த வெற்றி எல்லாம் பார்த்த இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிக்கின்றது. சினிமாவில் ஒரு பெரிய நிலையை அடைவது என்பது கஷ்டமான விஷயம். தனது நடிப்பு திறமையாலும், கதை தேர்ந்தெடுக்கும் கவனத்தாலும் இன்று உச்சநிலையை அடைந்திருக்கிறார் பிரதீப்.
விக்னேஷ் சிவன் பண்ணுவது நியாயமா..??
விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கமிட்டாகி வெற்றிகரமாக திரைப்படத்தை நடித்து முடித்தார். வெளி வருவதாக இருந்த திரைப்படம் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. மீண்டும் ஒரு மாதத்திற்குள் வரும் என ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்த நிலையில் செப்டம்பர் 18 திரையரங்கில் வெளியாகும் என விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
மீண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி ஒத்து வராத நிலையில், விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்பட தேதியை தள்ளி வைத்துள்ளார். இந்த செய்தி தற்போது வலைத்தளத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
சிவகார்த்திகேயனின் மதராசி திரைப்படமும் அதே மாதத்தில் வெளியாவதால், நிச்சயம் சிவக்கார்த்திகேயடன்போட்டி போட முடியாது என்று விலகி விட்டாரோ? இல்லை வேறு ஏதாவது காரணமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி முன் வைக்கப்படுகிறது.
முதலில் இத்திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு பதிலாக அஜித்துக்கு தான் இந்த கதை கூறப்பட்டது. ஸ்கிரிப் பிடிக்காததால் அஜித் வேண்டாம் என மறுத்து விட்டார். விக்னேஷ் சிவன் இப்படி தள்ளிப் போடுகிறார் என்று தெரிந்து தான் அவர் முதலிலேயே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பல பேச்சுகள் எழுந்துள்ளது.