Arjun : ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு தற்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அதிரடி ஆக்சன் படங்கள் என்றாலே அப்போது அர்ஜுனனை தான் இயக்குனர்கள் கமிட் செய்வார்கள். ஆனால் அவரது மார்க்கெட் போன பிறகு ஹீரோவாக நடிக்காமல் மற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
அந்த வகையில் லியோ படத்தில் அவரது நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். மேலும் அர்ஜுனனின் மகளும் நடிகையாக சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.
இந்த சூழலில் தற்போது 62 வயதாகும் அர்ஜுன் மீண்டும் ஹீரோ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் இயக்கும் படத்தில் தான் அர்ஜுன் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
62 வயதில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுன்
மேலும் இப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக அபிராமி நடிக்க இருக்கிறார். சமீபத்தில் கூட தக் லைஃப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் அர்ஜுனனின் மகள் கதாபாத்திரத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் கதைக்களம் அப்பா மகள் இடையே ஆன உறவை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறதாம். ஏற்கனவே அப்பா மகள் கதை உடைய விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
ஆகையால் தொடர்ந்து இது போன்ற படங்களுக்கு வரவேற்பு கிடைத்த வருவதால் அர்ஜுன் இந்த படத்தில் நடிக்க முன்வந்துள்ளார். தற்போதும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அர்ஜுன் மீண்டும் கதாநாயகனாக நடிப்பது அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது.