Gossip: வெளிச்ச நடிகரின் மனைவி இருக்கிறத விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டு பாலிவுட் பக்கம் போனார். ஆனால் இப்போது சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி விட்டார்.
பாலிவுட் வாய்ப்புக்காக ஒர்க் அவுட் செய்து ஃபிட்டாக இருந்த நடிகை தனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஒன்று இரண்டு படங்களை தவிர அவரை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.
முக்கிய ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் தூது விட்டுப் பார்த்தார் நடிகை. ஆனால் பலன் பூஜ்ஜியம் தான். இதனால் மீண்டும் கணவர் பிள்ளைகளோடு சொந்த ஊருக்கே திரும்பி இருக்கிறார்.
இடுப்பழகியின் ரீ என்ட்ரி
இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது இடுப்பழகி நடிகை திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் வில்லி, கேரக்டர் ரோல் என பெரிய அளவில் அவர் கவனம் பெறவில்லை.
ஆனால் சமீபத்தில் வந்த படம் அவருக்கு ரீ என்டரியாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த படங்களும் தற்போது அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்து தான் நடிகரின் மனைவி ஆடிப் போய்விட்டாராம்.
இதுக்கு மேலயும் அமைதியா இருக்க முடியாது என தற்போது ஒரு பார்ட்டி வைத்து வாய்ப்பு தேட தொடங்கி விட்டார். சமீபத்தில் இந்த பார்ட்டி கலைக்கட்டிய நிலையில் நடிகரின் பிறந்தநாளுக்கும் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்திருக்கிறாராம் நடிகை.