Ajith : நடிகர் அஜித்குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர். ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பதிலும் கூட உச்சத்தில் தான் இருக்கிறார் அஜித்.
இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ரேசிங்கிலும் பேர் போன ஒருவர். இவர் தற்போது ரேசிங் மற்றும் சினிமா இரண்டையுமே இரண்டு கண்கள் போல பார்த்து வருகிறார். அடுத்தடுத்து ரேசிங், சினிமா என அடுத்தடுத்து ட்ரெண்டிங்ளையே இருந்த்து வருகிறார் அஜித்.
தற்போது அஜித் அவர்கள் “குட் பேட் அக்லி” படத்தின் மிகப்பெரும் வெற்றியையே கொடுத்துவிட்டு ரேஸிங்கு சென்றுவிட்டார். தற்போது காத்திக்கிடந்த ரசிகர்களுக்கு மறுபடியும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தை கொடுக்க போகிறாராம் அஜித்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு மேலும் ஒரு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ரேஸிங்கிலும் கலக்கி கொண்டிருக்கிறார் அஜித். இதுவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது ரேஸிங்கில் விபத்து நடந்து நல்லவேளை அஜித் சார்க்கு ஒன்றும் ஆகவில்லை என்று ரசிகர்கள் பெருமூச்சு விட்டிருக்கும் இந்த நேரத்தில். ரசிகர்களுக்காக மேலும் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் அஜித்.
அமர்களம் – 2 எடுக்கப்போறாங்களாம்..
ஆமாம் அஜித் நடிப்பில் வெளிவந்த “அமர்க்களம்” படம் அப்போதைக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாகும். இதில் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவருமே இனைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தின் மூலம் அஜித் நிறைய ரசிகர்களை பெற்றார்.
அமர்க்களம் படத்தின் இயக்குனர் சரண் மீண்டும் அஜித்துடன் இணைந்து படம் செய்யப்போவதாக பேச்சுவார்த்தை நடக்கிறதாம் இவ்வாறு வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.
இது அமர்க்களம்-2 க்கான பேச்சுவார்த்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. அப்படி அமர்க்களம்-2 ஆக இருந்தால் அஜித் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும்.