Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பிள்ளைகளை கண்டித்து நல்ல முறையில் வளர்ப்பதில் தான் ஒரு சிறந்த அப்பா என்று பாண்டியன் இதுவரை நினைத்து இருந்தார். ஆனால் அதெல்லாம் இல்லை, சுதந்திரமான பேச்சும் நினைத்ததை செய்யக்கூடிய பக்குவத்தையும் கொடுப்பவர் தான் நல்ல அப்பா என்று செந்தில், பாண்டியனுக்கு உரைக்கும் படி சொல்லிவிட்டார்.
இதனால் பாண்டியன் கொஞ்சம் தடுமாறி இருந்த நிலையில் அரசி, நான் சொன்னால் நீங்க யாரும் நம்ப மாட்டீங்க. அதனால் பயந்து போய் தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேலு வீட்டிற்கு போனேன் என்று சொன்ன விஷயத்தையும் யோசித்துப் பார்த்து கோமதியிடம் பாண்டியன் பீல் பண்ணி பேசுகிறார். அந்த இடத்தில் அரசி, நம் வீட்டில் சொன்னால் அப்பா அம்மா புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.
அந்த நம்பிக்கை இல்லாத பொழுது நான் சிறந்த அப்பாவாக இருந்திருக்க முடியாது. செந்தில் சொன்னதும் அரசி சொன்னதையும் யோசிச்சு பார்க்கும் பொழுது பயம் இருந்தால் போதும் நான் சிறந்த அப்பா என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கிடையாது, பிள்ளைகளிடம் ஒரு நண்பர்களாக பேசி அவர்கள் யோசிப்பதையும் நினைப்பதையும் தன்னிடம் வந்து சொல்லக்கூடிய அளவிற்கு நான் அவர்களிடம் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.
இதனை அடுத்து பழனிவேலு தூங்கும் பொழுது சுகன்யா வழக்கம் போல் பழனிவேலுமிடம் பிரச்சினை பண்ணும் விதமாக டார்ச்சரை கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் இதுவரை சுகன்யா, பழனிக்கு டார்ச்சர் கொடுத்து இருந்தார். எப்பொழுது அரசி வாழ்க்கையை கெடுப்பதற்கு துணிந்தாரோ இனி சும்மா இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப சுகன்யாவை வெளுத்து வாங்கும் அளவிற்கு பழனி பதிலடி கொடுத்து விடுகிறார்.
இதனால் இனி சுகன்யாவின் ஆட்டம் பழனிவேலுவிடம் செல்லுபடியாகாது. அடுத்ததாக சுகன்யாவின் நடவடிக்கைகளை மாற்றியாக வேண்டும் என்று பாண்டியன், சுகன்யாவை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணி இனி இந்த மாதிரி பிரச்சினை வராது என்று சத்தியம் பண்ணு என சொல்கிறார். அதோடு பழனிவேலுவையும் டார்ச்சர் பண்ண கூடாது புருஷனுக்கான மரியாதையை கொடுத்து மரியாதையை வாங்கி பழகு என்று கண்டிக்கிறார்.
அடுத்ததாக அரசி வாழ்க்கையை சரி செய்யும் விதமாகவும் இதுவரை குமரவேலு பண்ண டார்ச்சருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாண்டியன் பொறுப்பான அப்பாவாக போலீஸ் ஸ்டேஷனில் குமரவேல் மீது கம்பளைண்ட் கொடுத்து இனி அரசிக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காத படி துணிச்சலான முடிவை எடுத்து விடுகிறார். அத்துடன் அரசி நல்ல படித்து ஒரு வேலையில் சேரும் வரை கல்யாண பேச்சு எடுக்க கூடாது. அவள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பாண்டியன் முடிவு பண்ணி விட்டார்.