Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், மனோகரை பார்த்து பேசின விஷயத்தை நிலாவிடம் சொல்ல வேண்டும் என்று சோழன், நிலாவுக்கு போன் பண்ணுகிறார். அப்பொழுது உங்க அப்பா சென்னைக்கு வந்திருக்கிறார். நான்தான் அவரை பிக்கப் பண்ணி டிராப் பண்ணினேன். ஆனால் உங்கள் மீது இருக்கும் கோபமும் குறையவில்லை, என்னையும் திட்டிக் கொண்டே வந்தார் என்று சொல்கிறார்.
எந்த அளவுக்கு என்னை அவமானப்படுத்த முடியுமோ அதையெல்லாம் பேசி என்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டார். ஆனால் அவர் உங்களுடைய அப்பா என்ற ஒரே காரணத்திற்காக நான் அமைதியாக எல்லா அவமானத்தையும் தாங்கிக் கொண்டேன். அதே இடத்தில் வேறு ஒருவர் இருந்தார் நடந்திருக்குதே வேற என்று சோழன், நிலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உடனே நிலா, சோழனிடம் மன்னிப்பு கேட்டு இனி எங்க அப்பாவை பார்த்தால் நீங்கள் பேசாமல் வந்து விடுங்க என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக இந்த விஷயத்தை சோழன், பாண்டியன் மெக்கானிக் ஷாப்புக்கு போயி சொல்லிக்கொண்டு நிலா என்னை விட்டு போய் விடுவாளோ என பயந்து போய் கேள்வி கேட்கிறார். ஆனால் பாண்டியன், அப்படி எல்லாம் போக மாட்டாங்க கவலைப்படாதே என்று சொல்கிறார்.
அதற்குச் சோழன், எனக்கு நிலா மீது நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது என்று சொல்லி பேசிக் கொள்கிறார். அடுத்தபடியாக நிலாவின் அப்பா மனோகர், நிலாவை தேடி பேசுவதற்காக அய்யனார் குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார். அப்பொழுது அங்கே வந்த சேரன், நிலாவின் அப்பாவை பார்த்து வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார்.
அங்கே போனதும் நிலாவிடம் பாசமாக பேசி மனோகர் டிராமா பண்ண ஆரம்பிக்கிறார். அந்த ட்ராமாவை நிலாவும் நம்பி விடுகிறார். இதனால் மனோகர் சூழ்ச்சி செய்து நிலா மற்றும் சோழனை பிரித்து இவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்தும் விதமாக சதி செய்யப் போகிறார். இது எதுவும் தெரியாமல் சேரன், மனோகர் கூப்பிட்டதும் நிலாவையும் சோழனையும் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு சரி என்று தத்தியாக சொல்லிவிடுகிறார்.