ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துக்கு முன்னாடி ரஜினி ரசிகர்களுக்கு பட்டாசு வெடிக்கும் தீபாவளி இருக்கு என லோகேஷ் சொல்லிக் கொண்டிருக்கிறார். 14ஆம் தேதி ரிலீசாக போகும் கூலி படத்திற்கு இப்பவே வெறியேற்றும் காய்ச்சல் வந்துள்ளது.
ஆரம்பத்தில் லோகேஷ், ரஜினியிடம் இந்த பட கதையை கூறும்போது இரண்டாம் பாதியை ரெடி பண்ணாமல் முதல் பாதியை மட்டுமே தயக்கத்தோடு கூறியிருக்கிறார். ஆனால் அதிலேயே ரஜினி மிகவும் இம்ப்ரஸ் ஆகி ஒத்துக் கொண்டாராம். அப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்ற யூகத்தை இப்பொழுதே நாம் கணித்து விடலாம்.
படத்தை கணித்தவரை, தங்கம் மற்றும் தங்க வாட்ச் கடத்தும் கும்பல் தலைவன் ரஜினிகாந்த். ஆனால் அவர் சம்பாதித்த பின் அதிலிருந்து வெளியே வந்த பிறகும் அந்த கும்பல் எல்லை மீறி ஆட்டம் போடுகிறது. இதனால் அதனை ரஜினி துவம்சம் செய்யும் கதைதான் கூலி படம் என ஒரு செய்தி பரவுகிறது.
இந்த படத்திற்கு இப்பவே ஹைப் எகிறி உள்ளது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு லோகேஷ் முயற்சி செய்து வருகிறார். கொடுத்த காசுக்கு இந்த படம் தகுதியாக இருக்கும் என மட்டும் கூறுகிறார். இந்த படத்தை அமேசான் பிரைம் 125 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது.
ஏற்கனவே தக்லைஃப் படத்திற்கு கமல்ஹாசன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இந்த படத்தை எட்டு வாருங்கள் கழித்து தான் ஓடிடி யில் விட வேண்டும் என அக்ரிமெண்ட் போட்டார். அதை போல் கூலி படமும் 8 வாரங்கள் கழித்து தான் ரிலீஸ் ஆகும் என லோகேஷ் மர்ம முடிச்சு போடுகிறார்