Sj surya : SJ சூர்யா அவர்கள் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் “வாலி” படத்தை தொடர்ந்து “குஷி “,”நியூ” அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கியுள்ளார் இவை அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தது.
அடுத்ததாக “இறைவி ” , “ஸ்பைடர்”,” நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற படங்களை இயக்கினார் இதில் இறைவேதமானது நல்ல வரவேற்பு மக்களிடையில் பெற்றது நல்ல கதைக்களம் ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இது வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.
இதற்கு அடுத்ததாக இவர் சிறிது காலம் சினிமாவில் சற்று தொய்வுடன் காணப்பட்டார். பிறகு இவருக்கு வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இன்று இவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கின்றார்.
இயக்குனராக சாதிக்காததை , வில்லனாக சாதித்துள்ளார் எஸ் ஜே சூர்யா..
மெர்சல் : இதில் “மெர்சல்” படத்தில் இவர் நடிகர் விஜய் அவர்களுக்கு வில்லனாக நடித்திருப்பார் அந்த படத்தில் இவரது வில்லன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
ராயன் : “ராயன்” திரைப்படத்தில் இவரது வில்லங்க கதாபாத்திரம் பெருமளவில் பிரபலமாக பேசப்பட்டது. இவரது வில்லன் கேரக்டர் இந்த இடத்தில் கச்சிதமாக பொருந்தியிருந்தது.
மார்க் ஆன்டனி : இந்த மார்க் ஆண்டனி படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்கள் வித்தியாசமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்க்கும் விதத்தில், இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
மாநாடு : மாநாடு படத்தில் இதனுடைய வில்லன் கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது என்றே கூறலாம். காமெடி கலந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்து கலக்குவது இவரது சிறப்பு.
சரிபோதா சனிவாரம் : இது ஒரு தெலுங்கு திரைப்படம் இந்த திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா அவர்கள் வில்லனாக நடித்து தனது நடிப்பு திறமையை தக்க வைத்திருப்பார்.
இவர் இயக்குனராக இருந்தபோது இல்லாத ரசிகர்கள் பட்டாளம். இவர் வில்லனாக நடித்ததற்கு பிறகு இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே சேர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது