Thalaivan Thalaivi: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவன் தலைவி வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் முதல் பாடல் பெரிய அளவில் ஹிட்டாகி விட்டது.
அதுதான் இப்போது சோஷியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு முன்பே படத்தின் டைட்டில் டீசர் வேற அளவில் ரீச் ஆனது. அதேபோல் இப்போது ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவும் கவனம் பெற்றது. இப்படி படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் தயாரிப்பு தரப்பு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை.
இதுவே போதும் படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என அவர்கள் அமைதியாகி விட்டனர். ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது. நிச்சயம் இது ஜெயிக்கிற குதிரை என்பது அவருக்கு தெரிந்து விட்டது.
அதனால் இன்னும் கொஞ்சம் ஹைப் ஏத்துவோம் என அவர் தன்னுடைய செலவில் சில பிரமோஷன் செய்கிறாராம். டிஜிட்டல் ப்ரோமோஷன் உட்பட தன்னால் முடிந்ததை அவர் செய்து வருகிறார்.
மகாராஜா போல இப்படமும் அவருக்கு மகுடமாக அமையும் என தெரிகிறது. குடும்ப படங்களுக்கு தற்போது வரவேற்பு இருக்கும் நிலையில் நிச்சயம் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பேசப்படும்.
ட்ரெய்லரில் கூட நித்யா மேனன், விஜய் சேதுபதி ஜோடி பொருத்தம் அட்டகாசமாக இருந்தது. அதை வைத்துப் பார்க்கும்போது தலைவன் தலைவி நிச்சயம் பாக்ஸ் ஆபிஸை கலக்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.