Cinema : சினிமாவில் படங்கள் வசூலை அள்ளி குவித்து கொண்டிருக்கும் இந்த வேளையில். சில படங்கள் அதிக பார்வையாளர்களை பெற்றும் நல்ல படம் என்ற தரத்தை உயர்ந்து கொண்டிருக்கிறது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் வசூலை அள்ளி குவித்த படங்கள் அனைத்துமே அதிக பார்வையாளர்களை போய் சேரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் அதிக பரவலர்களை கொண்ட படங்கள் யாவும் அதிக வசூலை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்ல கதையில்லாமல், ஆனால் நடிகர்களை வைத்து கூட ஒரு படம் வசூலை அள்ளி குவித்திவிடும். அனால் ஒரு நல்ல கதாயுள்ள படத்தை மட்டும்தான் பார்வையாளர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த அளவில் netflix -ல் நிறைய படங்களை மக்கள் விரும்பி பார்த்துள்ளனர் அதில் குறிப்பாக 8 படங்கள் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளன. அந்த படங்களை பார்க்கலாம்.
முதலிடத்தில் “மகாராஜா” படம் உள்ளது இது 27.1M பார்வையாளர்களை பெற்றுள்ளது. இரண்டாவதாக “லியோ” படம் 22.1M பரவலயலகளை பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில “துணிவு” படம் உள்ளது, இந்த படம் 16.4M பார்வையாளர்களை பெற்றுள்ளது.
நான்காவது படமாக “அமரன்” படம் உள்ளது இந்த படம் 13.6M பார்வையாளர்களை அடைந்துள்ளது. ஐந்தாவது இடத்தில் “தி கோட்” படம் 12.2M பார்வையாளர்களை பெற்றுள்ளது.
அடுத்ததாக “வாத்தி” படம் 11.8M பார்வையாளர்களை பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. “மெய்யழகன்” படம் 10M பார்வையாளர்களை பெற்று 7 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது. இறுதியாக “இந்தியன் 2” படம் 9.3M பார்வையாளர்களை பெற்று 8 ஆவது இடத்தில உள்ளது.
வசூல், வசூல் என வசூலை மட்டுமே கேட்டு கொண்டிருந்த நமக்கு கதையை பார்த்தும் மக்கள் படத்தை ரசிக்கிறார்கள் என அறிந்தவுடன் கொஞ்சம் திருப்த்தியாக உள்ளது. நல்ல கதை இன்றுவரை ரசிக்கப்படுகிறது. நல்ல கதை என்றைக்குமே நிலைத்து நிற்கும் என்பதில் சந்தகமில்லை.