Vijay : விஜய் அவர்கள் அரசியல், சினிமா என இரண்டிலுமே தற்போது முன்னணியில் இருக்கிறார். இரண்டையுமே கொஞ்சம் கூட தொய்வில்லாமல் செய்து வருகிறார். சினிமாவில் தனது கடைசி பட வேலைகளை முடித்து விட்டு தற்போது அரசியலில் தீவிரமாக வேலை செய்துவருகிறார் விஜய்.
இவ்வாறு இருக்கு நேரத்தில் நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து பின்பு வரவில்லை. சிலர் அரசியல் தொடங்கி தனியாக போராட முடியாமல் கூட்டணி வைத்து விட்டனர். இன்னும் சிலர் தனியாக அரசியல் நடத்தி ஒன்றும் ஆகவில்லையே என குழப்பத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் பஞ்சமில்லாமல் இருப்பது காட்சிகள் மட்டும்தான். இந்த நேரத்தில் விஐய் அவர்கள் கட்சி ஆரம்பித்து தற்போது சுயமாக முடிவெடுத்து அனைத்துமே வெற்றிகரமாக செய்து வருவது எதிர்ப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
ரஜினி, அஜித்தை பகைச்சுக்காதீங்க விஜய்..
இந்த நேரத்தில் நடிகர்கள் என்று பார்த்தாலே ரசிகர்கள் கண்டிப்பாக இருப்பார்களா தமிழ்நாட்டில் இன்றைய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர்கள் ரஜினி, அஜித் மற்றும் விஜய். விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததால் இந்த ரசிகர்கள் அனைவரும் நல்ல மாற்றத்தை எதிர்பார்த்து சிலர் விஜய்யின் தொண்டர்களாக மாறிவிட்டனர்.
இவ்வாறு இருக்கையில் “வலைப்பேச்சு அந்தணன்” தற்போது அளித்திருந்த நேர்காணல் ஒன்றில் தேர்தல் வரும் சமயத்தில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
அவ்வாறு செய்தல் ஓட்டுகள் பிரியும், ரஜினி அரசியல் வரவில்லை என்ற ஆதங்கம் ரஜினி ரசிகர்களிடையே இருக்கும். அதனால் விஜய் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புகல் உள்ளது. அதே போல் அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக விஜய் அவர்களை ஆதரிக்கவும் வாய்ப்பு உண்டு எனவே இவர் இவ்வாறு கூறியிருப்பார் போல.