Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சுகன்யாவுக்கு அட்வைஸ் பண்ணிய பாண்டியன் அதிரடியாக எடுத்த முடிவு என்னவென்றால் தவறு செய்தவனை சும்மா விட்டுக் கொண்டிருந்தால் அவன் திரும்பத் திரும்ப தப்பு பண்ணிக் கொண்டே தான் இருப்பான். அதனால் தவறுக்கு எப்பொழுதுமே தண்டனை என்ற பயத்தை அவனுக்கு உருவாக்க வேண்டும்.
அதனால் அரசி வாழ்க்கையை கெடுக்க நினைத்த அந்த குமரவேலுவை சும்மா விடப்போவதில்லை. அதனால் போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்கு தயாராகி விட்டேன் என்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் பாண்டியன் சொல்கிறார். உடனே தங்கமயில், இதனால் அரசி போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு அலையுற மாதிரி இருக்கும், பேரும் கெட்டுப் போய்விடும் வேண்டாம் என்று சொல்கிறார்.
அதற்கு பாண்டியன் தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்கு போனால் தான் கவலைப்பட வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க ஜெயிலுக்கு போகலாம் என்று அரசியை கூட்டிட்டு ஜெயிலுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுகிறார். இதற்கிடையில் கதிர் ராஜி மீனா செந்தில் எல்லோரும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது குமரவேலு இவர்களை சீண்டினார்.
இதனால் கோபப்பட்ட கதிர், குமாரை அடிப்பதற்கு தயாராகி விட்டார். பிறகு ராஜி சமாதானப்படுத்திய நிலையில் போலீஸ் நேரடியாக குமார் வீட்டிற்கு சென்று குமாரை அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள். அப்பா சொன்னதற்காக கம்பளைண்ட் கொடுத்திருந்தாலும் அரசிக்கு இதில் விருப்பமே இல்லை. முக்கியமாக ஜெயிலுக்கு போகும் குமாரின் நிலைமையை பார்த்து அரிசி பரிதாபமாக பார்க்கிறார்.
ஆனால் ஒரு தவறு நடக்கும் பொழுது அதற்கு உடனடியாக தண்டனை கிடைத்து விட்டால்,தான் மறுபடியும் இந்த மாதிரி தவறு நடக்காத அளவிற்கு நிம்மதியாக இருக்க முடியும். இதற்கு சிறந்த வழிகாட்டியாக பாண்டியன் எடுத்த சரியான முடிவு அரசி வாழ்க்கையும் சரி செய்ய உதவப் போகிறது.