Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி தான் கடைசியில் விஜயை காப்பாற்றுவார் என்று சொல்வதற்கு ஏற்ப வெண்ணிலாவே பத்திரமாக கூட்டிட்டு வந்து கோர்ட்டில் சாட்சி சொல்ல வைத்து விட்டார். வெண்ணிலாவும் நான் மொட்டை மாடியில் இருந்து தற்கொலை பண்ணவில்லை. விஜய்க்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என்னை தள்ளிவிட்டது பசுபதி தான் என்று நடந்து உண்மையை சொல்லி விஜய்யை காப்பாற்றி விட்டார். பிறகு எல்லோரும் விஜய் வீட்டுக்கு சென்று ஒன்றாக இருந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது விஜய்க்கு சப்போர்ட் பண்ணும் இடமாக கூடவே நவீன் குமரனும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் வெண்ணிலாவும் எந்தவித பிரச்சினையும் பண்ணாமல் அமைதியாகவே இருக்கிறார்.
பிறகு லாயர் தாத்தாவுக்கு போன் பண்ணி பசுபதியை கையும் களவுமாக பிடித்து ஜெயிலில் போட்டாச்சு. வெண்ணிலாவின் மாமா நம்பிராஜனையும் பாதுகாப்பாக கூட்டிட்டு வந்தாச்சு என்று சொல்கிறார். உடனே எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கும் தருணத்தில் வெண்ணிலா காவிரியை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார சொல்கிறார்.
அதன் பிறகு யாரும் இல்லாத பொழுது காவிரி வெண்ணிலாவுக்கு நன்றி சொல்கிறார். அதற்கு வெண்ணிலா நீ தான் உன் குழந்தை மீது எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கிறாயே. பிறகு எப்படி நான் மாத்தி பேசுவேன், குழந்தை மீது சத்தியம் பண்ணியபடி விஜயை எனக்கு விட்டுக் கொடுத்துவிட்டு போய்விடுவதான என்று கேட்கிறார். காவிரியும் வேற வழியில்லாமல் ஆமாம் என்று சொல்லிவிடுகிறார்.
இப்படி காவேரி, விஜய் வீட்டில் இருக்கும் டிரஸ் எடுத்து பேக் பண்ணி கிளம்பும்போது வெண்ணிலா நீங்க விஜய் மீது வைத்திருக்க தான் உண்மையான காதல். விஜய் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாது என்பதற்காக எனக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருந்தீர்கள். உங்களைத் தவிர விஜய் யாரும் நல்லா பார்த்துக்க முடியாது என்று சொல்லி விஜய் இடம் காவேரி ஒப்படைத்துவிட்டு வெளியில கிளம்பி விடுவார். அதன் பிறகு காவேரி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக விஜய் அவருடைய வாழ்க்கை நடத்த போகிறார்.